I


42திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



என்பவாகலின், வானவர்க்கும் அமுதாயின என்றார். உவரி உவர்ப்
பினையுடையதெனக் காரணப் பெயர்; இ வினைமுதற்பொருள் விகுதி. (16)

ஈறி லாதவ ளொருத்தியே யைந்தொழி லியற்ற
வேறு வேறுபேர் பெற்றென வேலைந ரொன்றே
ஆறு கால்குளங் கூவல்குண் டகழ்கிடங் கெனப்பேர்
மாறி யீறில்வான் பயிரெலாம் வளர்ப்பது மாதோ.

     (இ - ள்.) ஈறு இலாதவள் ஒருத்தியே - அழிவில்லாதவளாகிய
சிவசத்தி ஒருத்தியே, ஐந்தொழில் இயற்ற - படைப்பு முதலிய ஐந்து
தொழில்களையும் நடத்துதற்பொருட்டு, வேறு வேறு பேர் பெற்றென -
வெவ்வேறு பெயர்களைத் தாங்கி நின்றாற்போல, வேலை நீர் ஒன்றே -
கடல் நீர் ஒன்றே, ஆறு கால் குளம் கூவல் குண்டு அகழ் கிடங்கு என -
நதி கால்வவய் குளம் கிணறு சூழமாகத் தோண்டப் பெற்ற கிடங்கு என,
பேர்மாறி - பெயர்கள் வேறுபட்டு, ஈறு இலவான் பயில் எலாம் -
எண்ணிறந்த உயர்ந்த பயிர்களை, வளர்ப்பது - வளர்க்கா நிற்கும் எ - று.

     ஐந்தொழில் - படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல்
என்பன. வேறு வேறுபேர் - பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி,
கிரியாசத்தி என்பன; வாணி, திரு, உமை, மகேசை, மனோன்மனி
என்னலுமாம். குண்டு - ஆழம்; குட்டமுமாம். ஏகாரங்கள் தேற்றப்பொருளன.
பெற்றென, தொகுத்தல் விகாரம். பெயர் பேரென மருவியது. மாது
ஓ : அசை. (17)

          [அறுசீரடியாசிரிய விருத்தம்]
களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்
குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க
வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
அளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார்.

     (இ - ள்.) களமர்கள் - உழவர்கள், பொன்னேர் பூட்டி - பொன்
னேரைப் பூட்டி, தாயர்வாய் - அன்னையரின் வாயினின்றும் வருகின்ற,
கனிந்த பாடற்கு - கனிவோடு கூடிய பாடலுக்கு, உளம் மகிழசிறாரின் -
மனமகிழுகின்ற சிறுவர்களைப்போல, ஏறும் ஒருத்தலும் உவகை தூங்க -
எருதுகளும் எருமைக்கடாக்களும் மகிழ்ச்சிகூர, வளம் மலி மருதம் பாடி -
வளமிக்க மருதப்பண்களைப் பாடி, மனவலிகடந்தோர் - மனத்தின்
வலிமையைக் கடந்தோரால், வென்ற - வெல்லப்பட்ட, அளமரு பொறிபோல்
- சுழலுகின்ற ஐம்பொறிகளும் (அவர்கடள பணத்தவழி நிற்றல்) போல,
ஏவல் ஆற்ற - (அவைகள்) தாம் பணித்தவாறு செய்ய, ஆள்வினையில்
மூண்டார் - உழுதொழிலின் கண்ணே தலைப்பட்டார்கள் எ - று.

     களமர், நெற்களமுடையார் என்னும் காரணப்பெயர். புத்தேரினைப்
பொன்னேர் என்பர்; நல்லேர் என்றலுமுண்டு.