I


422திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



வாரிருங் கொங்கை யாளோர் மாதராள் வானோ ருய்யக்
காரிருள் விடமு ண்டன்று கறுத்ததே யன்று கொன்றைத்
தாரிருஞ் சடையார் கண்டந் தையன்மீர் தமது நெஞ்சங்
காரிரும் பென்றே காட்டக் குறியிட்ட கறுப்பே யென்றாள்.

     (இ - ள்.) வார் இருங் கொங்கையாள் ஓர் மாதராள் -
கச்சினையணிந்த பெரிய கொங்கையையுடைய ஒரு பெண், தையன்மீர் -
பெண்களே, கொன்றைத்தார் இருஞ் சடையார் கண்டம் - கொன்றை
மாலையையணிந்த நீண்ட சடையையுடைய இவர் திருமிடறானது, அன்று
வானோர் உய்ய - முன்னொரு காலத்தில் தேவர்கள் உயிர் பிழைக்க, கார்
இருள் விடம் உண்டு கறுத்ததே அன்று - கரிய இருள் போன்ற நஞ்சினை
உண்டதனால் கறுத்ததேயன்று; (அதிலுள்ள கருமை), தமது நெஞ்சம் - தமது
உள்ளம், கார் இரும்பு என்றே காட்ட - கரிய வலிய இரும்பேயென்பதைக்
காட்டும் பொருட்டு, குறியிட்ட கறுப்பே என்றாள் - அடையாளமாக இட்ட
கறுப்பே யாகும் என்று கூறினாள் எ - று.

     மாதர் - காதல்; உரிச்சொல்; அதனடியாக மாதராள் என வந்தது.
ஏகாரங்கள் தேற்றத்தில் வந்தன. இரும்பே என ஏகாரத்தைப் பிரித்துக்
கூட்டுக. நெஞ்சம் : ஆகுபெயர். (132)

பொன்னவிர் சடையான் முன்னே
     போனதென் னெஞ்சு தூதாய்*
அன்னது தாழ்த்த தென்னென்
     றழுங்குவா ளொருத்தி கெட்டேன்
என்னது நெஞ்சும் போன
     தென்றன ளொருத்தி கேட்ட
மின்னனாள் வேற்கண் சேந்தாள்
     விளைத்தன ளவளும் பூசல்.

     (இ - ள்.) என் நெஞ்சு தூதாய் - எனது மனம் தூதாக, - பொன்
அவிர் சடையான் முன்னே போனது - பொன் போல் விளங்கும்
சடையையுடைய இறைவனிடத்துச் சென்றது; அன்னது - அது, தாழ்த்தது என்
என்று - (என்பால் மீண்டுவரத்) தாமதித்தது என்னையென்று, ஒருத்தி
அழுங்குவாள் - ஒரு மாது வருந்துவாள்; ஒருத்தி - மற்றொருத்தி, கெட்டேன
- ஆ கெட்டேன், என்னது நெஞ்சும் போனது என்றனள் - என்னுடைய
நெஞ்சும் (தூதாகப்) போயிற்று என்றாள்; கேட்ட மின் அனாள் வேல்கண்
சேந்தாள் - (அதனைக்) கேட்ட மின் போன்ற அப் பெண்
(எனக்குரியவரிடத்து நீ காதல் வைத்தது என்னையெனச் சினந்து) வேல்
போன்ற கண்கள் சிவந்தாள்; அவளும் பூசல் விளைத்தனள் -
மற்றொருத்தியும் அவளோடு அங்ஙனமே போர் விளைத்தாள் எ - று.

     இறைவனைத் தனித்தனி தமக்குக் காதலனாகக் கருதியிருந்த இரு
மகளிர் தம்முட் பூசல் விளைத்தமை கூறினார்; கண்கள் செவந்து அவளும்


     (பா - ம்.) * நெஞ்சந் தூதாய்.