போர் செய்தனள்
என ஒருத்திக்கேயேற்றிப் பிறர் கூறிய பொருள்
பொருந்தாமை காண்க. என்னது : னகரம் விரித்தல். (133)
செப்பிளங்
கொங்கை யாளோர் தெரிவைநீர் திருநோக் கெம்பால்
வைப்பதென் மதன்போ லெம்மைச் சுடுவதே* மதனுக் காவி
அப்பொழு தளித்தாற் போலெம் மாவியு மளித்தா லின்று
மெய்ப்புக ழுமக்குண் டின்றேற் பெண்பழி விளையு மென்றாள். |
(இ
- ள்.) செப்பு இளங் கொங்கையாள் ஓர் தெரிவை - செப்பினை
ஒத்த இளமையாகிய கொங்கையையுடைய ஒரு பெண், எம்பால் நீர்
திருநோக்கு வைப்பது என் - எம்மிடத்து நீர் திருக்கண் பார்வை வைப்பது
எற்றுக்கு, மதன் போல் எம்மைச் சுடுவதே - மதவேளை எரித்தது போல
எம்மையும் சுடுகின்றதே, அப்பொழுது மதனுக்கு ஆவி அளித்தாற்போல் -
எரித்த அப்பொழுதே அம்மன் மதனுக்கு உயிரைக் கொடுத்தது போல, எம்
ஆவியும் இன்று அளித்தால் - எமது உயிரையும் இப்பொழுதே
கொடுப்பீரானால், உமக்கு மெய்ப்புகழ் உண்டு - உமக்கு உண்மையாகிய
புகழ் உளது; இன்றேல் - கொடாவிடில், பெண் பழி விளையும் என்றாள் -
பெண் பழி உண்டாகும் என்று கூறினாள் எ - று.
மதனைச்
சுட்டது போல என விரிக்க. பெண் பழி - பெண்ணைக்
கொன்ற பழி; பெண்ணினைக் கொல்லலாகாதென்பது,
"ஆவு
மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை." |
என்னும்
புறப்பாட்டா னறிக. (134)
கவனமால் விடையான் றன்னைக்
கடைக்கணித் திலனென் றங்கோர்
கவணவான் கொடியோ ரோவத்
தொழில்வல்லான் குறுக நோக்கி
இவனைநீ யெழுதித் தந்தால்
வேண்டுவ வீவ னென்றாள்
அவனையா ரெழுத வல்லா
ரென்றன னாவி சோர்ந்தாள். |
(இ
- ள்.) ஓர் வான் சுவணக்கொடி - சிறந்த பொற்கொடி போன்ற
ஒரு நங்கை, கவனம் மால் விடையான் - விரைந்த செலவினையுடைய
திருமாலாகிய இடபத்தையுடைய இறைவன், தன்னைக் கடைக்கணித்திலன்
என்று - தன்னைக் கடைக்கணிக்காது செல்கின்றானென்று கருதி, அங்கு
ஓர்
(பா - ம்.)
* சுடுவதென்.
|