I


424திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     ஓவத்தொழில் வல்லான் குறுக - அவ்விடம் ஓவியத் துறையில்
கைபோய ஒருவன் வர, நோக்கி - (அவனைப்) பார்த்து, இவனை நீ எழுதித்
தந்தால் - இங்குச் செல்லும் குழகனை நீ எழுதித் தரவல்லையேல், வேண்டுவ
ஈவன் என்றாள் - நீ வேண்டுவனவற்றைக் கொடுப்பேன் என்றாள், யார்
அவனை எழுதவல்லார் என்றனன் - யாவர் அவனை எழுதவல்லவர்
(ஒருவருமில்லை) என்று அவன் கூறினான்; ஆவி சோர்ந்தாள் - (அது கேட்டு
அவள்) உயிர் சோர்ந்தாள் எ - று.

     கவனம் - வேகம். கடைக்கணித்தல் : பெயரடியாக வந்த வினை. ஓவம்
- ஓவியம் : விகாரம். ஈவன், அன் : தன்மையில் வந்தது. அவன் எனவும்,
என்றலும் அவள் எனவும் வருவித்துரைக்க. (135)

வலத்தயன் வரவு காணாள் மாலிடங் காணாள் விண்ணோர்
குலத்தையுங்காணாள் மண்ணோர் குழாத்தையுங் காணாள் ஞானப்
புலத்தவர் போலக் கண்ட பொருளெலா மழுமான் செங்கைத்
தலத்தவன் வடிவாக் கண்டா ளொருதனித் தையன் மாது.

     (இ - ள்.) ஒரு தனித் தையல் மாது - ஓர் ஒப்பற்ற அழகிய மாது,
வலத்து அயன் வரவு காணாள் - வலத்தின்கண் பிரமன் வருதலையும்
காணாது, மால் இடம் காணாள் - திருமால் இடத்தின்கண் வருதலையும்
காணாது, விண்ணோர் குழாத்தையும் காணாள் - தேவர் கூட்டத்தையும்
காணாது, மண்ணோர் குழாத்தையும் காணாள் - மக்கள் கூட்டத்தையும்
காணாது, ஞானப் புலத்தவர் போல - மெய்யுணர்வுடைய ஞானியர் போல,
கண்ட பொருளெலாம் - பார்த்த பொருள் அனைத்தையும், மழுமான்
செங்கைத் தலத்தவன் வடிவாக் கண்டாள் - மழுவையும் மானையும் சிவந்த
கையிடத்துடைய சிவபெருமானது திருவுருவமாகவே பார்த்தாள் எ - று.

     மெய்ஞ்ஞானிகட்கு, 'பிரபஞ்ச பேதமெலாந் தானாய்த்தோன்றி,' என்றபடி
எல்லாம் சிவனுருவாய்த் தோன்றுமாகலின் ஞானப்புலத்தவர் போல என்றார்.
அவனையன்றி வேயொருவரையும் கண்டிலளென்பது கருத்து. காணாள்
என்பன முற்றெச்சங்கள். வடிவா - வடிவாக. (136)

முன்பெற்றங் காலிற்செல்ல வண்ணலை முன்போய்க் காண்பான்
பின்பற்றி யாசைப் பாசம் பிணித்தெழ வோடு வாளோர்
பொன்பெற்ற முலையாள் கொம்ப ருகுமலர் போலத் தாளின்
மின்பெற்ற காஞ்சி தட்ப விலங்கொடு நடப்பா ளொத்தாள்.

     (இ - ள்.) பெற்றம் காலின் முன் செல்ல - இடபமானது காற்றைப்
போல விரைந்து முன்னே செல்ல, அண்ணலை - இறைவனை, முன் போய்க்
காண்பான் - முன்னே சென்று காணுதற்பொருட்டு, பின்பற்றி ஆசைப் பாசம்
பிணித்து எழ - பின்றொடர்ந்து ஆசைக் கயிறானது கட்டி இழுத்துச் செல்ல,
ஓடுவாள் ஓர் பொன் பெற்ற முலையாள் - ஓடுகின்றவளாகிய ஒரு பொன்
போலும் தேமல் பூத்த கொங்கையையுடைய பெண், கொம்பர் உகுமலர் போல
மின் பெற்ற காஞ்சி - கொம்பினின்றும் உதிர்கின்ற மலர் போல
(இடையினின்றும் நழுவிய) ஒளிமிக்க மேகலையானது, தாளில் தட்ப - தனது
காலின் மேல் விழுந்து