I


திருமணப் படலம்425



தடுக்க, விலங்கொடு நடப்பாள் ஒத்தாள் - விலங்கொடு நடக்கும் ஒரு
பெண்ணைப் போன்றாள் எ - று.

     காண்பான் : வினையெச்சம். ஓடுவாள் : பெயரெச்சமாயது. கொம்பர் :
போலி. உகுமலர்போல என்றமையால் இடையினின்றும் நழுவிய என
வருவிக்கப்பட்டது. தட்ப - தடுக்க; தளை : பகுதி. (137)

விதுக்கலை மிலைந்து செங்கண் விடையின்மேல் வருமா னந்த
மதுக்கட றனைக்கண் வாயான் முகந்துண்டு மகளி ரெல்லாம்
புதுக்கலை சரிவ தோரார் புரிவளை கழல்வ தோரார்
முதுக்குறை வகல்வ தோரார் மூழ்கினார் காம வெள்ளம்.

     (இ - ள்.) விதுக்கலை மிலைந்து - சந்திரனது ஒரு கலையையணிந்து,
செங்கண் விடையின் மேல் வரும் - சிவந்த கண்களையுடைய இடபத்தின்
மேல் வருகின்ற, ஆனந்த மதுக் கடல்தனை - பேரின்பமாகிய தேன் கடலை,
மகளிர் எல்லாம் - மாதரனைவரும், கண் வாயால் முகந்து உண்டு -
கண்களாகிய வாயால் மொண்டு குடித்து, புதுக் கலை சரிவது ஓரார் - புதிய
ஆடை சோர்வதை உணராமலும், புரிவளை கழல்வது ஓரார் -
விரும்பியணிந்த கைவளைகள் கழலுவதை உணராமலும், முதுக் குறைவு
அகல்வது ஓரார் - பேரறிவு தம்மினின்றும் நீங்குதலை உணராமலும், காம
வெள்ளம் மூழ்கினார் - காம வெள்ளத்தில் மூழ்கினார்கள் எ - று.

     இறைவன் ஆனந்தக் கடலாதலை,

"ஆனந்த மாக்கட லாடுசிற் றம்பலம்"

எனவும்,

"ஆனந்த வெள்ளத் தறைகழலோன்"

எனவும் மாணிக்கவாகப் பெருமான் திருக்கோவையாருட் கூறுதலானு மறிக;
அளவுபடாத ஆனந்தமே வடிவாகவுடையவனென்பது கருத்து. சுவை
மிகுதியானும் மயங்கச் செய்தலானும் 'மதுக்கடல்' என்றார்; ஏழு கடலுள்
மதுக்கடல் ஒன்றாதலுமுணர்க. உண்டற் கருவி வாயாகலின் 'கண்வாயால்'
என்றார். அளவுபடாத அதனுள் தாம் உண்ணலாமளவு உண்டனரென்பார்
'முகந்துண்டு' என்றார். மதுவுண்டோர் அம் மயக்கத்தால் கலை முதலியன
சோர்தலையும் அறிவு கெடுதலையும் உணராமை போல இவரும்
உணராராயினாரென்க. சரிவது, கழல்வது, அகல்வது : தொழிற்பெயர்கள்.
ஓரார் மூன்றும் முற்றெச்சம். (138)

பைத்தழ கெறிக்கு மாடப் பந்திமே னின்று காண்பார்
கைத்தலங் கூப்பி யாங்கே கண்களு நோக்கி யாங்கே
சித்தமுங் குடிபோய்ச் சொல்லுஞ் செயலுமாண் டங்கண் மாண
வைத்தமண் பாவை யோடு வடிவுவே றற்று நின்றார்.

     (இ - ள்.) பைத்து எறிக்கும் அழகு மாடப் பந்தி மேல் நின்று
காண்பார் - பசிய ஒளியை வீசும் அழகிய மாட வரிசைகளின் மேல் நின்று
காணும் பெண்கள், கைத்தலம் கூப்பி யாங்கே - கைகள் கூப்பிய