I


426திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



வண்ணமாகவும், கண்களும் நோக்கியாங்கே - கண்களும் பார்த்த
வண்ணமாகவும் (நின்று), சித்தமும் குடிபோய் - மனமும் அவரிடம் குடிபோக,
சொல்லும் செயலும் மாண்டு - சொல்லுஞ் செயலும் இறக்க, அங்கண்மாண
வைத்த - அவ்விடத்தில் மாட்சிமைப்பட வைத்த, மண் பாவையோடு -
சுதையாற் செய்த பாவைகளோடு, வடிவு வேறற்று நின்றார் - வடிவு
வேறுபாடின்றி நின்றார்கள் எ - று.

     பைத்து - பசியதாகிய ஒளி : பைத்த என்பதன் அகரந் தொக்கதுமாம்.
கூப்பிய கைகள் கூப்பியபடியும் நோக்கிய கண்கள் நோக்கியபடியும் ஒரு
பெற்றியாக நின்றென்க. போக, மாள என்னும் செயவெனெச்சங்கள்
செய்தெனெச்சமாய்த் திரிந்து நின்றன; போய், மாண்டு என்னும் சினை
வினைகள் நின்றார் என்னும் முதல் வினையோடு முடிந்தன என்னலுமாம்.
மண் - ஈண்டுச் சுதை; "மண்மாண் புனைபாவை யற்று" என்பதற்குப்
பரிமேலழகர் எழுதிய உரையை நோக்குக. ( )

அன்பட்ட புரமுங் காம னாகமுஞ் சுட்ட தீயிம்
மின்பட்ட சடிலத் தண்ணன் மெய்யென்ப தறியார் நோக்கிப்
பொன்பட்ட கலனு மெய்யும் பொரிகின்றா ரவனைப் புல்லின்
என்பட்டு விடுமோ வைய வேழைய ராவி யம்மா.

     (இ - ள்.) அன்பு அட்ட புரமும் - அன்பை ஒழித்த திரிபுரத்தாரையும்,
காமன் ஆகமும் - மதவேளின் உடலையும், சுட்ட தீ - சுட்டெரித்த நெருப்பு,
இ மின்பட்ட சடிலத்து அண்ணல் மெய் என்பது அறியார் - இந்த மின்
போன்ற சடையையுடைய இறைவனது திருவுருவமே என்பதைச் சிறிதும்
அறியாதவராய், ஏழையர் - இம் மகளிர்கள், நோக்கி - (விரும்பிப்) பார்த்து,
பொன்பட்ட கலனும் மெய்யும் பொரிகின்றார் - பொன்னாலாகிய அணிகளும்
உடலும் பொரியப் பெறுகின்றார்கள்; அவனைப் புல்லின் - அவனைத்
தழுவுவாராயின், ஆவி - அவர்கள் உயிர், என் பட்டுவிடுமோ - என்ன
பாடுபடுமோ எ - று.

     அட்ட - கொன்ற; ஒழித்த. புரம், புரத்தை விடாமல்
புரத்திலுள்ளாரையும் உணர்த்திற்று : இலக்கணை. மின்பட்ட, பட்ட :
உவமவுருபு. நோக்கு மளவன்றிப் புல்லுதலுஞ் செய்வரேல் என்க. என் -
என்ன வருத்தம். ஏழையரென்றார், எளிமை தோன்ற. ஐய என்னும்
இடைச்சொல் இங்கு இரக்கக் குறிப்பின் மேனின்றது; ஐய - மென்மையுடைய
எனினுமாம். அம்மா : அசைச்சொல். (140)

கொடிகள்பூத் துதிர்ந்த போதிற் கொம்பனார் கலையுஞ் சங்குந்
தொடிகளுஞ் சுண்ணத் தூளுஞ் சுரர்பொழி மலரு நந்தி
அடிகள்கைப் பிரமபு தாக்கச் சிந்திய வண்ட வாணர்
முடிகளின் மணியுந் தாருங் குப்பையாய் மொய்த்த வீதி.

     (இ - ள்.) கொடிகள் பூத்து உதிர்ந்த போதில் - கொடிகளினின்றும்
மலர்ந்து சிந்திய மலர்களைப் போல, கொம்பு அனார் கலையும் சங்கும்
தொடிகளும் - பூங் கொம்பை ஒத்த மகளிர் பானின்றும் சிந்திய மேகலையும்
வளைகளும் தொடிகளும், சுண்ணத் தூளும் - சுண்ணப் பொடியும், சுரர்
பொழி மலரும் - தேவர்கள் பொழிந்த மலரும், நந்தி அடிகள் கைப்பிரம்பு