எட்டு மங்கலங்களையும்,
பரிந்து வந்து காட்ட - ஏந்தி வந்து காட்டவும்,
மாளிகை மருங்கில் செல்வான் - திருமாளிகையின் பக்கத்திற் செல்கின்றான்
எ - று.
மேல்
'வேள்விச் சாலையும்' என்னுஞ் செய்யுளிற் கூறிய எட்டு
மங்கலங்களுள் விடை, சீவற்கம், வலம்புரி, சுவத்திகம் என்பன விலக்கி;
கொடி, முரசு, மணி, அங்குசம் என்பன கூட்டியுள்ளமை காண்க; இதனால்
இவர் வெவ்வேறான கொள்கைகளையும் மேற்கொண்டிருத்தல் புலனாகும்.
நெய்யில் முளைத்துப் பூத்த மலர் போலும் என உவமையுமாம். படிவம் -
அழகுமாம். பதுமக்கொம்பர் : இல்பொருளுவம்; பதுமத்திலுள்ள கொம்பரென
விரித்துத் திருமகள் என்றுரைத்தலுமாம். (143)
செப்புரங் கவர்ந்த கொங்கை யரம்பையர் தீபங் காட்டுந்
துப்புர வன்பி னார்க்குத் தூயமெய்ஞ் ஞான நல்கும்
முப்புரங் கடந்தான் றன்னை மும்முறை யியங்க ளேங்கக்
கப்புர விளக்கந் தாங்கி வலஞ்செயக் கருணை பூத்தான். |
(இ
- ள்.) தீபம் காட்டும் துப்புரவு அன்பினார்க்கு - திருவிளக்கிடும்
தூய அன்பினையுடைய தொண்டர்களுக்கு, தூய மெய்ஞ்ஞானம் நல்கும் -
தூய்மையான மெய்யுணர்வைத் தந்தருளும், முப்புரம் கடந்தான் - மூன்று
புரங்களையும் எரித்த இறைவன், செப்பு உரம் கவர்ந்த கொங்கை
அரம்பையர் - செப்பினது வலியைப் போக்கிய கொங்கைகளையுடைய
தேவமகளிர், கப்புர விளக்கம் தாங்கி - கர்ப்பூர விளக்கினை ஏந்தி, இயங்கள்
ஏங்க - வாத்தியங்கள் ஒலிக்க, தன்னை மும்முறை வலஞ்செய - தன்னை
மூன்று முறை வலமாக வர, கருணை பூத்தான் - அருள் செய்தான் எ - று.
அரம்பையர்
வலஞ்செய எனவும், கடந்தான் கருணை பூத்தான் எனவும்
இயையும். துப்புரவு - தூய்மை; உறுதியுமாம். நல்குமென்னும் பெயரெச்சம்
கடந்தான் என்பதன் விகுதியைக் கொண்டு முடியும். கப்புரம் : சிதைவு
விளக்கிடுவார்க்கு ஞானம் நல்குதலை,
"விளக்கினார் பெற்றவின்ப மெழுக்கினாற் பதிற்றியாகும்
துளக்கினன் மலர்தொடுத்தாற் றூயவிண் ணேறலாகும்
விளக்கிட்டார் பேறுசொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானமாகும்
அளப்பில கீதஞ்சொன்னார்க் கடிகடா மருளுமாறே" |
என்னும் ஆளுடைய
வரசுகள் தேவாரத்தானறிக. (144)
கோயின்முன் குறுக லோடு மைம்புலக் குறும்பு தேய்த்த
தூயநால் வேதச்செல்வர் சுவத்திக ளோத நந்தி
சேயிருந் தடக்கை பற்றிச் செங்கணே றிழிந்து நேர்ந்து
மாயனு மயனு நீட்டு மலர்க்கர மிருபாற் பற்றி. |
(இ
- ள்.) கோயில் முன் குறுகலோடும் - திருக்கோயிலின் முன்
சென்றவுடன், ஐம்புலக் குறும்பு தேய்த்த - ஐம்புலன்களாகிய குறுப்புகளை
அழித்த, தூய நால்வேதச் செல்வர் - புனிதமான நான்மறை
|