I


திருமணப் படலம்429



வாழ்க்கையையுடைய அந்தணர்கள், சுவத்திகள் ஒத - மங்கலங் கூற, நந்தி
சேயிருந் தடக்கை பற்றி - திருநந்தி தேவரின் சிவந்த நீண்ட பெரிய
கரங்களைப் பிடித்து, செங்கண் ஏறு இழிந்து - சிவந்த கண்களையுடைய
இடபத்தினின்றும் இறங்கி, மாயனும் அயனும் இருபால் நேர்ந்து - திருமாலும்
பிரமனும் இரு பக்கத்தும் வந்து நீட்டு மலர்க் கரம் பற்றி - நீட்டிய மலர்
போன்ற கைகளைப் பற்றிக் கொண்டு எ - று.

     குறும்பு - பகையாகிய குறு நிலவரசு; "அவமிகும் புலப்பகை கடந்து"
என்றார் முன்னும். சுவத்தி - நல முண்டாகவெனக் கூறும் மங்கலமொழி. இரு
தட : ஒரு பொருட் பன்மொழியுமாம். (145)

எதிர்ந்தரு மறைகள் காணா திளைத்தடி சுமந்து காணும்
முதிர்ந்தவன் புருவ மான பாதுகை முடிமேற் சத்தி
பதிந்தவர் தலைமேற் கொண்டு பாசவல் வினைதீர்த் துள்ளம்
பொதிந்துபே ரின்பநல்கும் பொன்னடிப் போது சாத்தி.

     (இ - ள்.) அருமறைகள் எதிர்ந்து காணாது - அரிய வேதங்கள்
தேடிக் காண மாட்டாமல், இளைத்து - மெலிந்து, அடி சுமந்து காணும்
முதிர்ந்த அன்பு உருவமான - (இனி) திருவடிகளைச் சுமந்தாதல் காண
வேண்டுமெனக் கருதி முறுகிய அன்புடன் வடிவமாகிய, பாதுகை முடிமேல்
- பாதுகையின் முடியின்மேல், சத்தி பதிந்தவர் - சத்திநி பாதம் உற்றவர்,
தலைமேற்கொண்டு - முடியின்மேற் கொள்ளப் பெற்று, பாச வல்வினை
தீர்த்து உள்ளம் பொதிந்து - (அவர்கள்) ஆணவ மாயைகளையும் வலிய
வினையையும் போக்கி உள்ளத்தில் நீங்காது நின்று, பேர் இன்பம் நல்கும்
பொன் அடிப்போது சாத்தி - பேரின்பத்தையருளும் பொன் போன்ற திருவடி
மலர்களைச் சாத்தி எ - று.

     மறைகள் எதிர்ந்து காணாமல் அன்மைச் சொல்லினாற் கூறியிளைக்கு
மென்பது முன்னும் கூறப்பட்டது. காணும் அன்பு - காண வேண்டுமென்னும்
அன்புடன். பாதுகை முடிமேல் அடிப்போது சாத்தி என வியையும். சத்தி
பதிந்தவர் - சத்திநிபாத முற்றவர்; திருவருட் சத்தி பதியப்பெற்றவர்.
கொண்டு - கொள்ளப் பெற்று; கொள்ளவென்றுமாம். வினையென வேறு
வருதலின் பாசமென்றது ஆணவத்தையும் மாயையும் ஆம்; பாசமாகிய
வினையென்று கூறி, ஆணவ மாயைகளை உபலக்கணத்தாற் கொள்ளலுமாம்.
சத்தி பதிந்த பின் பாச நீக்கமும் இன்பப் பேறும் முறையே உண்டாமென்க.
இறைவற்கு வேதமே பாதுகையென்பதனை,

"மறையே நமது பீடிகையா மறையே நமது பாதுகையாம்"

என இந்நூலுட் பின் வருவதனாலுமுணர்க. 'முடிமேற் சாத்தி' என ஒரு சாரார்
கொண்ட பாடம் பொருந்தாமையுணர்க. (146)

பையர வுரியி னன்ன நடைப்படாம் பரப்பிப் பெய்த
கொய்யவிழ் போது நீத்தங்* குரைகழ லடிந னைப்பத்
தெய்வமந் தார மாரி திருமுடி நனைப்பத் தென்னர்
உய்யவந் தருளு மையன் உள்ளெழுந் தருளுமெல்லை.

     (பா - ம்.) * போதினீத்தம்.