"கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோ ரேர்மங் கலமும்" |
என்னும் நாடுகாண்காதையால்
பொன்னேர் பூட்டு மியல்பும் அதற்கு ஏர்
மங்கலம் பாடுவதுண்டென்பதும் விளங்கும்.
ஒருத்தல்
எருமைக்கடாவாதலை ஏற்புடைத்தென்ப எருமைக்
கண்ணும் என்னும் மரபியல் சூத்திரத்தானறிக.
மனத்தை அடக்கி னோர்க்கு
ஐம்பொறிகளும் ஏவல் செய்யுமென்றார். ல ளு வொற்றுமைபற்றி அலமரு
அளமருவென நின்றது. (18)
பலநிற மணிகோத் தென்னப் பன்னிற வேறு பூட்டி
அலமுக விரும்பு தேய வாள்வினைக் கருங்கான் மள்ளர்
நிலமக ளுடலங் கீண்ட சால்வழி நிமிர்ந்த சோரிச்
சலமென நிவந்த செங்கேழ்த் தழன்மணி யிமைக்கு மன்னோ |
(இ
- ள்.) பலநிறமணி கோத்தென்ன - பல நிறங்களையுடைய
மணிகளைக் கோவை செய்ததுபோல, பல் ஏறு பூட்டி - பல நிறங்களை
யுடைண எருதுகளைப் பூட்டி, அலம் முக இரும்புதேய - கலப்பையின்
முனையிலுள்ள கொழுத் தேயும்படி, ஆள்வினை - உழுதொழில் செய்யும்,
கரும் கால் மள்ளர் - வலியகாலினையுடைய உழவர்கள், நில மகள் -
புவிமடந்தையில், உடலம் கீண்ட - உடலைக் கிழித்த, சால் வழி -
படைச்சாலின் வழியே, நிமிர்ந்த சோரிச் சலமென - பொங்கிய
உதிரவெள்ளத்தைப்போல, நிவந்த செம்கேழ் - உயர்ந்த செந்நிறத்தை
யுடைய, தழல்மணி இமைக்கும் - நெருப்புப் போன்ற மணிகள் ஒளிவீசா
நிற்கும் எ - று.
கருங்கால்
என்பதிற் கருமை வலிமை; கருந்தொழில் வினைஞர்
என்னும் சிறுபாண் உரையிற்காண்க; நிறமுமாம்.
நிலமகள் என்ற தற்கியைய
உடலென்றும், சோரியென்றும் கூறினார். தழல்மணி - மாணிக்கம்.
கோத்தென்ன தொகுத்தல். உடலம், அம் சாரியை. மன் ஓ : அசை. (19)
ஊறுசெய் படைவாய் தேய வுழுநரு நீர்கால் யாத்துச்
சேறுசெய் குநருந் தெய்வந் தொழுதுதீஞ் செந்நெல் வீசி
நாறுசெய் குநரும் பேர்த்து நடவுசெய் குநருந் தெவ்வின்
மாறுசெய் களைகட் டோம்பி வளம்படுக் குநரு மானார். |
(இ
- ள்.) (அவ்வுழவர்கள்) ஊறுசெய் - (புவியைக்) கிழக்கின்ற,
படைவாய் தேய - கலப்பையின் முகம்தேயும்படி, உழுநரும் -
உழுகின்றவர்களும், நீர்கால் யாத்து - நீரினைக்கட்டி, சேறு செய்குநரும் -
சேறாக்குகின்றவர்களும், தெய்வம் தொழுது - (அந்நிலக்கடவுளாகிய)
இந்திரனை வணங்கி, தீம்செந்நெல் வீசி - இனிய செந்நிலமுடைய
நெல்முளைகளை விதைத்து, நாறு செய்குநரும் - நாறுசெய்கின்றவர்களும்
-பேர்த்து நடவுசெய்குநரும் - (அவற்றைப்) பெயர்த்து நடுகின்றவர்களும்,
தெவ்வின் மாறுசெய் - பகைவரைப்போலப் பகை செய்கின்ற, களைகட்டு -
|