I


430திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) பை அரவு உரியின் அன்ன நடைப் படாம் பரப்பி -
படத்தினையுடைய பாம்பின் களைந்த தோலையொத்த நடைப் பாவாடையை
விரித்து (அதன் மேல்), பெய்த - பரப்பிய, கொய் - காம்பு களைந்த,
அவிழ் - இதழ் விரிந்த, போது நீத்தம் - மலர்களின் வெள்ளம், குரைகழல்
அடி நனைப்ப - ஒலிக்கும் வீரகண்டையையணிந்த திருவடிகளை
நனைக்கவும், தெய்வ மந்தாரம் மாரி - (தேவர்கள் பொழியும்) தெய்வத்
தன்மை பொருந்திய மந்தார மலர் மழை, திருமுடி நனைப்ப - திருமுடியை
நனைக்கவும், தென்னர் உய்யவந்தருளும் ஐயன் - பாண்டியர்கள் ஈடேற
வந்த தலைவனாகிய சிவபெருமான், உள் எழுந்தருளும் எல்லை -
திருக்கோயிலினுள்ளே எழுந்தருளும் பொழுது எ - று.

     மென்மையும் பூத்தொழிலுமுடைமையால் படாத்திற்கு அரவுரி உவமம்;

"நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்
தரவுரி யன்ன வறுவை நல்கி"

எனப் பொருநராற்றுப்படையுள் வருதல் காண்க. மந்தாரம் ஏனையவற்றிற்கும் உபலக்கணம். (147)

மங்கல மகளி ரோடுங் காஞ்சன மாலை வந்து
கங்கையின் முகந்த செம்பொற் கரகநீ ரனையார் வாக்கத்
திங்களங் கண்ணி வேய்ந்த சிவபரஞ் சோதிபாத
பங்கயம் விளக்கி யந்நீர் தலைப்பெய்து பருகி நின்றாள்.

     (இ - ள்.) மங்கல மகளிரோடும் காஞ்சனமாலை வந்து - மங்கல நாண்
உடைய பெண்களோடும் காஞ்சனமாலை வந்து, கங்கையின் முகந்த -
கங்கையினின்றும் மொண்டு கொண்டு வந்த, செம்பொன் கரகநீர் - சிவந்த
பொன்னாலாகிய கரகத்திலுள்ள நீரை, அனையார் வாக்க - அப் பெண்கள்
வார்க்க, திங்கள் அம் கண்ணி வேய்ந்த - திங்களாகிய அழகிய மாலையை
அணிந்த, சிவபரம் சோதி பாத பங்கயம் விளக்கி - சிவபரஞ் சுடரின்
திருவடித் தாமரைகளை விளக்கி, அந்நீர் தலைப்பெய்து பருகி நின்றாள் -
அங்ஙனம் விளக்கிய தீர்த்தத்தைச் சென்னியிற்றெளித்து உள்ளும் பருகி
நின்று எ - று.

     மங்கல மகளிர் - சுமங்கிலிகள். காஞ்சனமாலை
கணவனையிழந்திருத்தலின் 'மங்கல மகளிரோடும் வந்து' என்றார். நின்றாள் :
எச்சம். (148)

பாதநாண் மலர்மே லீரம் புலரவெண் பட்டா னீவிச்
சீதமென் பனிநீ ராட்டி மான்மதச் சேறு பூசித்
தாதவிழ் புதுமந் தாரப் பொன்மலர் சாத்திச் சென்னி
மீதிரு கரங்கள் கூப்பி வேறுநின் றிதனைச் சொன்னாள்.

     (இ - ள்.) நாள் மலர் பாதம் மேல் ஈரம் புலர - அன்றலர்ந்த தாமரை
மலர் போன்ற திருவடிகளிலுள்ள ஈரம் புலருமாறு, வெண்பட்டால் நீவி -
வெள்ளிய பட்டாடையால் துடைத்து, சீத மென்பனி நீர் ஆட்டி - குளிர்ந்த
மெல்லிய பனி நீரால் திருமஞ்சனம் செய்து, மான்மதச் சேறு பூசி - மிருக