விண்டல வானோ ரேனோர் மிடைதலான் ஞாலச் செல்வி
பண்டைய ளன்றி யின்று பரித்தனள் பௌவ மேழும்
உண்டவன் றன்னைத் தானின் றுத்தரத் திருத்தி னானோ
அண்டர்நா யகன்ற னாணை வலியினோ வறியே மம்மா. |
(இ
- ள்.) விண் தல வானோர் ஏனோர் மிடைதலால் -
வானுலகத்தவராய தேவர்களும் ஏனைய உலகத்தவர்களும் நெருங்குதலால்,
ஞாலச் செல்வி - புவிமகள், பண்டையள் அன்றி இன்று பரித்தனள் - முன்
போல ஒரு புறஞ் சாயாது இன்று சம நிலையில் நின்றே தாங்கினள். பௌவம்
ஏழும் உண்டவன் தன்னை - ஏழு கடலையும் பருகிய குறுமுனியை, தான்
இன்று உத்தரத்து இருத்தினானோ - தான் இப்பொழுது வடதிசையிலிருக்கச்
செய்தானோ (அன்றி), அண்டர் நாயகன் தன் ஆணை வலியினோ -
தேவர்களுக்கு நாயகனாகிய சிவபெருமானது ஆணை வலிமையினாலோ,
அறியேம் - நாம் அறியோம் எ - று.
மிடைதலாற்
பண்டு எய்திய தன்மையாளன்றியென்க. முன்
மலையரையன் புதல்வியாக விருந்த இறைவியைத் திருமணஞ் செய்யுங்
காலத்தில் வானோரும் ஏனோரும் கூடியிருந்தமையால் புவியின் தெற்கெல்லை
உயர்ந்து வடக்கெல்லை தாழ்ந்ததாகலின் 'பண்டையளன்றி' என்றார்.
அப்பொழுது அகத்தியனைத் தெற்கிலிருத்திப் புவியைச் சமனுறச்
செய்தானாகலின் 'இன்றுத்தரத் திருத்தினானோ, என்றார். தான் : இறைவன்.
இருத்த அதனானோ அன்றி வலியினானோ என்க. அவனது திருவருளின்
பெற்றி உணர்தற் கரிதென்பார் 'அறியேம்' என்றார். அம்மா : வியப்பிடைச்
சொல். (152)
மாமணித் தவிசில் வைகி மணவினைக் கடுத்த வோரை
தாம்வரு மளவும் வானத் தமனிய மலர்க்கொம் பன்னார்
காமரு நடன நோக்கிக் கருணைசெய் திருந்தா னிப்பாற்
கோமகள் வதுவைக் கோலம் புனைதிறங் கூற லுற்றேன். |
(இ
- ள்.) மாமணித் தவிசில் வைகி - பெரிய மணிகள் பதித்த
சிங்காதனத்தில் வீற்றிருந்தருளி, மண வினைக்கு அடுத்த ஓரை வரும்
அளவும் - திருமணச் செயலுக்குப் பொருந்திய முழுத்தம் வருங்காறும்,
வானத் தமனிய மலர்க் கொம்பு அன்னார் - வானுலகத்துள்ள பொற்பூங்
கொம்பையொத்த அரம்பையர் புரியும், காமரு நடனம் நோக்கிக் கருணை
செய்து இருந்தான் - அழகிய ஆட்டத்தைப் பார்த்து அருள் செய்து
இருந்தான்; இப்பால் - இனி, கோமகள் வருவைக் கோலம் புனைதிறம்
கூறலுற்றேன் - அரச குமாரியாகிய தாடதகைப் பிராட்டியார் திருமணக்
கோலம் செய்து கொள்ளும் வகையைச் சொல்லத் தொடங்கினேன் எ - று.
அடுத்த
- பொருந்திய; ஒரை - இலக்கினம் : முழுத்தம். தாம் : அசை.
காமரு, உ : சாரியை; காமம் மரு என்பது காமரு என்றாயிற்று என காமம்
மரு என்பது காமரு என்றாயிற்று எனலுமாம். (153)
|