வேண்டுவ
: வினையாலணையும் பெயர். அவாவற என்பார் 'வெறுப்ப'
என்றார். (155)
செம்மலர்த்
திருவும் வெள்ளைச் செழுமலர்த் திருவுந் தங்கள்
கைம்மலர்த் தவப்பே றின்று காட்டுவார் போல நங்கை
அம்மல ரனிச்ச மஞ்சு மடியிற்செம் பஞ்சு தீட்டி
மைம்மலர்க் குழன்மேல் வாசக் காசறை வழியப் பெய்து. |
(இ
- ள்.) செம்மலர்த் திருவும் - செந்தாமரை மலரில் இருக்கும்
திருமகளும், வெள்ளைச் செழுமலர்த் திருவும் - செழுமையாகிய
வெண்டாமரை மலரில் இருக்குங் கலைமகளும், தங்கள் கைமலர் தவப்பேறு
இன்று காட்டுவார்போல - தங்கள் கைகளாகிய மலர் செய்த தவப்பயனை
இன்று காட்டுகின்றவர் போல, நங்கை அம் அனிச்ச மலர் அஞ்சும் அடியில்
- பிராட்டியாரின் அழகிய அனிச்சப் பூவை மிதிக்க அஞ்சுகின்ற
திருவடிகளில், செம்பஞ்சு தீட்டி - செம்பஞ்சுக் குழம்பை ஊட்டி, மை மலர்க்
குழல்மேல் - முகில் போன்ற மலரையணிந்த கூந்தலில், வாசக்காசறை வழியப்
பெய்து - மணமுள்ள மயிர்ச் சாந்தை நிறையப் பூசி எ - று.
கல்வியும்
செல்வமாகலின் கலைமகளைத் திருவென்னும் பெயராற்
கூறினார். மென்மைக்கு ஆற்றாது அனிச்சமும் அஞ்சும் அடியென்னலுமாம். (156)
கொங்கையின் முகட்டிற் சாந்தங் குளிர்பனி நீர்தோய்த் தட்டிப்
பங்கய மலர்மே லன்னம் பவளச்செவ் வாய்விட் டார்ப்பத்
தங்கிய வென்ன வார நூபுரந் ததும்பச் செங்கேழ்
அங்கதிர் பாதசாலங் கிண்கிணி யலம்பப் பெய்து. |
(இ
- ள்.) கொங்கையின் முகட்டில் - கொங்கைகளின் உச்சியில்,
சாந்தம் குளிர் பனி நீர் தோய்த்து அட்டி - சந்தனத்தைக் குளிர்ந்த பனி
நீரில் குழைத்துச் சொரிந்து, பங்கய மலர் மேல் - தாமரை மலரின் மேல்,
அன்னம் - அன்னங்கள், பவளச் செவ்வாய் விட்டு ஆர்ப்பத் தங்கிய என்ன
- (தமது) பவளம் போன்ற சிவந்த வாயைத் திறந்து ஒலிக்கத் தங்கினமை
போல, ஆர - பொருந்த, நூபுரம் ததும்ப - சிலம்பு ஒலிக்கவும், செம் கேழ்
அம் கதிர் பாத சாலம் கிண்கிணி அலம்ப - சிவந்த நிறத்தையும் அழகிய
ஒளியையுமுடைய பாதசாலமும் கிண்கிணியும் ஒலிக்கவும், பெய்து -
அவற்றைத் திருவடிகளில் அணிந்து எ - று.
குளிர்
பனி நீர் என்புழிப் பனி நீர் பெயர். சிலம்பொலிக்கு
அன்னத்தினொலி உவமம். அடிகள் தாமரை மலர் போலுதலின் 'பங்கய
மலர் மேல் அன்னம்..............தங்கிய வென்ன' என்றார். தங்கிய : தொழிற்
பெயர். பாதசாலம் - பரியகம் என்றும் கூறப்படும்; பரியகம்
இன்னதென்பதனை,
"பொன்னிதழ்
பொதிந்த பன்னிற மணிவடம்
பின்னிய தொடரிற் பெருவிரன் மோதிரம்
தன்னொடு தொடக்கித் தமனியச் சிலம்பின்
புறவாய்ச் சூழ்ந்து புணரவைப் பதுவே" |
என்னுஞ் சூத்திரத்தாலறிக.
(157)
|