எண்ணிரண் டிரட்டி கோத்த விரிசிகை யிருபத் தொன்றிற்
பண்ணிய கலாப மீரேழ் பருமநா லிரண்டிற் செய்த
வண்ணமே கலையி ரண்டிற் காஞ்சியிவ் வகையோ ரைந்தும்
புண்ணியக் கொடிவண் டார்ப்பப் பூத்தபோற் புலம்பப் பூட்டி. |
(இ
- ள்.) எண் இரண்டு இரட்டி கோத்த விரிசிகை - முப்பத்திரண்டு
கோவையாகக் கோத்த விரிசிகையும், இருபத்தொன்றில் பண்ணிய கலாபம் -
இருபத்தொரு கோவையாகச் செய்த கலாபமும், ஈர் ஏழ் பருமம் - பதினான்கு
கோவையாக இயற்றிய பருமமும், நால் இரண்டில் செய்த வண்ணம் மேகலை
- எட்டுக் கோவையாகச் செய்த அழகிய மேகலையும், இரண்டில் காஞ்சி -
இரண்டு கோவையாகச் செய்த காஞ்சியுமென, இவ்வகை ஓர் ஐந்தும் - இவ்
வேறுபாட்டையுடைய ஐந்து அணிகளையும், புண்ணியக் கொடி வண்டு
ஆர்ப்பப் பூத்தது போல் - ஒர் அறக் கொடியயானது வண்டுகள் ஒலிக்கப்
பூத்திருத்தல் போல், புலம்பப் பூட்டி - ஒலிக்கும்படி இடையிலணிந்து எ - று.
கோத்த
வென்றதனால் கோவையென்பது கொள்க. இருபத்தொன்று
முதலியவற்றோடும் கோவையென்பதனைக் கூட்டி, ஆகவென விரித்துரைக்க.
இவையெல்லாம் இடையிலணியும் அணிகள். பூத்த : தொழிற்பெயர் ஈறு
தொக்கது. (158)
பொன்மணி வண்டு வீழ்ந்த காந்தளம் போது போல
மின்மணி யாழி கோத்து மெல்விரற் செங்கைக் கேற்ப
வன்மணி வைர யாப்புக் கடகமுந் தொடியும் வானத்
தென்மணிக் கரங்கள் கூப்ப விருதடந் தோளி லேற்றி. |
(இ
- ள்.) பொன் மணி வண்டு வீழ்ந்த - பொன்னிறமும் நீல மணியின் நிறமும்
வாய்ந்த வண்டுகள் தங்கிய காந்தள் அம் போது போல - அழகிய
காந்தள் மலர் போல, மெல் விரல் - மெல்லிய விரல்கள் (தோன்ற), மின்
மணி ஆழி கோத்து - (அவற்றில்) ஒளிவிடும் நீல மணி பதித்த பொன்
மோதிரத்தை அணிந்தும், செங்கைக்கு ஏற்ப - சிவந்த கைகளுக்குப் பொருந்த, வல் மணி
வைர யாப்புக் கடகமும் - வலிய வைரத்தாற் செய்த
தலைப்பூட்டையுடைய கடகங்களையும், இருதடம் தோளில் - இரண்டு
பிணைத்த தோள்களில், தொடியும் - தொடிகளையும், வானத்து எல் மணி
கரங்கள் கூப்ப - வானிலுள்ள சூரியன் கரங்களைக் குவிக்குமாறு, ஏற்றி -
அணிந்து எ - று.
மணியாழி
- மரகதத்தாள் செறியுமாம்;
"வாங்குவில்
வயிரத்து மரகதத் தாள்செறி
காந்தண் மெல்விரல் கரப்ப வணிந்து" |
என்பது சிலப்பதிகாரம்.
மெல்விரல் தோன்றக் கோத்தென்க. பத்திகளில்
வயிரங்களழுத்தப்பட்ட கடகமுமாம்;
"மத்தக மணியொடு
வயிரங்கட்டிய
சித்திரச் சூடகம்" |
|