என்பது சிலப்பதிகாரம்.
வானத்தினுள்ள எல்லாகிய மணியென்க; வான்
மணியென்பது சூரியனுக்கொரு பெயர். கைகுவித்து வணங்கவெனவும், ஒளி
சுருங்கவெனவும் பொருள்படக் 'கரங்கள் கூப்ப' என்றார்; கரம் - கை,
கிரணம். (159)
மரகத மாலை
யம்பொன் மாலைவித் துரும மாலை
நிரைபடு* வான வில்லி னிழல்பட வாரத் தாமம்
விரைபடு களபச் சேறு மெழுகிய புளகக் கொங்கை
வரைபடு மருவி யன்றி வனப்புநீர் நுரையு மான. |
(இ
- ள்.) விரைபடு கபளச் சேறு மெழுகிய புளகக் கொங்கை -
மணம் பொருந்திய களபக் குழம்பால் மெழுகப்பட்ட புளக மரும்பிய
கொங்கைகளில், மரகத மாலை அம் பொன் மாலை வித்துரும மாலை -
மரகத மாலையும் அழகிய பொன் மாலையும் பவள மாலையும், நிரைபடு
வான வில்லின் நிழல்பட - வரிசைப்பட்ட இந்திர வில்லைப் போல ஒளி
வீசவும், ஆரத் தாமம் - முத்துமாலை, வரைபடும் அருவியன்றி -
மலையினின்றும் வீழும் அருவியையொத்திருப்பதன்றி, வனப்பு நீர்
நுரையுமான - அழகாகிய நீரின் நுரையையும் ஒத்திருக்கவும் எ - று.
பன்னிற
மாலைகளாதலின் இந்திரவில்லை உவமை கூறினார்.
வித்துருமம் - பவளம். ஆரம் - முத்து. களபம் - கலவை. வனப்பாகிய நீர்
என உருவகம். (160)
உருவமுந் துடுவா யம்முத் துடுத்தபல் காசு கோளாய்
மருவவக் காசு சூழ்ந்த மாமணி கதிராய்க் கங்குல்
வெருவவிட் டிமைக்கு மார மேருவின் புறஞ்சூழ்ந் தாடுந்
துருவசக் கரம்போற் கொங்கை துயல்வர விளங்கச் சூட்டி. |
(இ
- ள்.) உருவம் முத்து உடுவாய் - பருத்த முத்துக்கள்
விண்மீன்களாகவும், அ முத்து உடுத்த பல்காசு கோளாய் - அம்
முத்துக்களைச் சூழ்ந்த பல மணிகள் கோட்களாகவும், அ காசு சூழ்ந்த
மாமணி கதிராய் மருவ - அம்மணிகளாற் சூழப்பட்ட பெரிய நடு நாயக மணி
சூரியயனாகவும் பொருந்தப் (புனைந்த), கங்குல் வெருவ விட்டு இமைக்கும்
ஆரம் - இருளஞ்சியோட ஒளிவிட்டு விளங்கும் பதக்கமானது, மேருவின்
புறம் சூழ்ந்து ஆடும் துருவ சக்கரம் போல, கொங்கை துயல் வர - அக்
கொங்கைகளில் அசையவும், விளங்கச் சூட்டி - விளக்கமுற அணிந்து எ - று.
கோள்
- ஈண்டு ஞாயிறும் இராகு கேதுக்களும் ஒழிந்த ஏனைய
கிரகங்கள். ஆய் : செயவெனெச்சத் திரிபு. ஆரம் - பதக்கம். துருவ
சக்கரத்தில் கோட்களும் நாட்களும் உடுக்களும் அடங்கியிருத்தலின்
அதனை உவமை கூறினார். கொங்கையை மேருவாகக் கொள்க.
மேற்பாட்டிலுள்ள நிழல்பட, மான என்னும் எச்சங்களையும், இப்பாட்டிலுள்ள
துயல்வர என்னும் எச்சத்தையும் சூட்டியென்பதனைக் கொண்டு முடிக்க. இச்
செய்யுளில் உருவகத்தை அங்கமாகக் கொண்டு உவமையணி வந்தது.
(161)
(பா
- ம்.) * நிரைபட.
|