I


438திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) கற்பகம் கொடுத்த இந்தக் காமரு கலன்கள் எல்லாம் -
கற்பகத்தரு அளித்த இந்த அழகிய அணிகளையெல்லாம், பொற்ப மெய்ப்
படுத்து - அழகுபடத் திருமேனியில் அணிந்து, முக்கண் புனிதனுக்கு - மூன்று
கண்களையுடைய சிவபெருமானுக்கு, ஈறு இலாத - முடிவில்லாத, அற்புதம்
மகிழ்ச்சி தோன்ற - வியப்பும் மகிழ்வும் உண்டாக, அழுகு செய்து -
ஒப்பனை செய்து, அமையம் தோன்ற - நல்லோரை வர, சொல் கலையாளும்
பூவின் கிழத்தியும் - கலைமகளும் திருமகளும், தொழுது - வணங்கி, நோக்கி
- (அழகைக் கண்குளிரக்) கண்டு எ - று.

     காமரு என்பதற்கு முன் உரைத்தமை காண்க. அற்புதம் மகிழ்ச்சிக்கு
அடையுமாம். சொல் - புகழுமாம். கமலையென்பது திருமகட்குச் சிறந்த
பெயராகலின் 'பூவின் கிழத்தி' என்றார். நோக்கித் தொழுது என
மாறியுரைத்தலும் அமையும். (164)

சுந்தர வல்லி தன்னைச் சோபன மென்று வாழ்த்தி
வந்திரு கையுந் தங்கண் மாந்தளிர்க் கைக ணீட்டக்
கொந்தவிழ் கோதை மாது மறமெலாங் குடிகொண் டேறும்
அந்தளிர்ச் செங்கை பற்றா வெழுந்தனண் மறைக ளார்ப்ப.

     (இ - ள்.) சுந்தரவல்லி தன்னைச் சோபனம் என்று வாழ்த்தி -
சுந்தரவல்லியாகிய தடாதகைப் பிராட்டியாரை மங்கலம் என்று வாழ்த்துப்
பாடி, இரு கையும் வந்து - இரு பக்கமும் வந்து, தங்கள் மாந்தளிர்க் கைகள்
நீட்ட - தங்களுடைய மாந்தளிர் போன்ற (மெல்லிய) கைகளை நீட்ட
(அவைகளை), கொந்து அவிழ் கோதை மாதும் - பூங்கொத்து அலர்ந்த
கூந்தலையுடைய பிராட்டியாரும், அறம் எலாம் குடி கொண்டு ஏறும் -
முப்பத்திரண்டு அறங்களும் குடி கொண்டு ஏறிய, அம் தளிர்ச் செங்கை
பற்றா - அழகிய தளிர் போன்ற சிவந்த கைகளாற் பற்றிக் கொண்டு,
மறைகள் ஆர்ப்ப எழுந்தனள் - வேதங்கள் ஒலிக்க எழுந்தருளினார் எ - று.

     தன்னை வாழ்த்தியென இயையும். இரு கை - இரு பக்கம். கையால்
அறம் வளர்த்தாளாகலின் அறமெலாம் குடி கொண்டேறும் செங்கையென்றார்.
கையாற் பற்றியென்க. (165)

[கலிவிருத்தம்]
அறைந்தன தூரிய மார்த்தன சங்கம்
நிறைந்தன வானவர் நீண்மலர் மாரி
எறிந்தன சாமரை யேந்திழை யார்வாய்ச்
சிறந்தன* மங்கல வாழ்த்தெழு செல்வம்.

     (இ - ள்.) தூரியம் அறைந்தன - திருமண முரசங்கள் ஒலித்தன;
சங்கம் ஆர்த்தன - சங்கங்கள் முழங்கின; வானவர் நீண்டுமலர் மாரி
நிறைந்தன - தேவர்கள் (பொழியும்) மிக்க மலர் மழை நிறைந்தன; சாமரை
எறிந்தன - சாமரைகள் வீசப் பெற்றன; மங்கல வாழ்த்து எழு செல்வம் -


     (பா - ம்.) * செறிந்தன.