I


திருமணப் படலம்439



மங்கல வாழ்த்து என எழுகின்ற செல்வங்கள், ஏந்து இழையார் வாய்
சிறந்தன - ஏந்திய அணிகளையுடைய மகளிர் வாயினின்றும் தோன்றிச்
சிறந்தன எ - று.

     எறிந்தன : செயப்பாட்டு வினைப் பொருளில் வந்த செய்வினை.
மங்கல வாழ்த்தைச் செல்வமென்றார்;

"செல்வன் கழலேத்துஞ் செல்வம் செல்வமே"

என்னும் ஆளுடைய பிள்ளையார் திருவாக்கைச் சிந்திக்க. (166)

அடுத்தனள் சுந்தரி யம்பொன டைப்பை
எடுத்தன ளாடி திலோத்தமை யேந்திப்
பிடித்தனள் விந்தை பிடித்தனள் பொற்கோல்
உடுத்த நெருக்கை யொதுக்கி நடந்தாள்.

     (இ - ள்.) சுந்தரி அடுத்தனன் அம்பொன் அடைப்பை எடுத்தனன்
- இந்திராணி வந்து அழகிய பொன்னாலாகிய அடைப்பையை ஏந்தினாள்;
திலோத்தமை ஆடி ஏந்திப் பிடித்தனள் - திலோத்தமை கண்ணாடியை
ஏந்திப் பிடித்தாள்; விந்தை பொன் கோல் பிடித்தனள் - வீரமகள் பொற்
பிரம்பு கொண்டு, உடுத்த நெருக்கை ஒதுக்கி நடந்தாள் - சூழ்ந்த
நெருக்கினை விலக்கி நடந்தாள் எ - று.

     முற்றுக்களுள் எச்சமாய் வருவன காண்க. (167)

கட்டவிழ் கோதை யரம்பை களாஞ்சி
தொட்டன ளூர்ப்பசி தூமணி யால
வட்ட மசைத்தனள் வன்ன மணிக்கா
சிட்டிழை கோடிகை மேனகை கொண்டாள்.

     (இ - ள்.) கட்டு அவிழ் கோதை அரம்பை - முறுக்கு விரிந்த மலர்
மாலையை அணிந்த அரம்பை, களாஞ்சி தொட்டனள் - காளாஞ்சியை
ஏந்தினள், ஊர்ப்பசி தூமணி ஆலவட்டம் அசைத்தனள் - ஊர்வசி
புனிதமான மணிகள் பதித்த ஆலவட்டத்தை அசைத்தனள்; மேனகை
வன்னம் மணிக்காசு இட்டு இழை கோடி கை கொண்டாள் - மேனகை
நிறமும் அழகும் பெற்ற மணிகள் அழுத்திய பூந்தட்டினை ஏந்தினள் எ - று.

     ஊர்ப்பசி, ஊர்வசியென்பதன் றிரிபு; பிரமனது ஊருவிற்றோன்றினமை
பற்றி வந்த பெயர்; ஊரு - தடை. ஆலவட்டம் - சாந்தாற்றி. கோடிகை -
பூந்தட்டு. (168)

கொடிகளே னக்குளிர் போதொடு சிந்தும்
வடிபனி நீரினர் வீசுபொன் வண்ணப்
பொடியின ரேந்திய பூம்புகை தீபத்
தொடியணி கையினர் தோகையர் சூழ்ந்தார்.

     (இ - ள்.) தோகையர் - பல மகளிர், கொடிகள் என - கொடிகள்
போல, குளிர் போதொடு சிந்தும் வடி பனி நீரினர் - குளிர்ந்த மலர்களுடன்