I


44திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



களைகளைக் களைந்து, ஓம்பி - (பிற ஊறுகள் நேராவண்ணம்) பாதுகாத்து,
வளம்படுக்குநரும் ஆனார் - வளப்படுத்துகின்றவரு மாயினார்கள் எ - று.

     கால்யாத்தல், ஒருசொல். தெய்வம் - இந்திரன்; ‘இந்திரதெய்வதந்
தொழுது நாறுநடுவார்’ என்பது திருத்தொண்டர் புராணம். இந்திரன்
மருதத்தின்தெய்வம்; ‘வேந்தன்மேய தீம்புன லுலகம்’ என்றார்
தொல்காப்பியனார். நாறு - நாற்று. பேர்த்து, பெயர்த்தென்பதன் மரூஉ.
கட்டு - கள்பகுதி, ட் இடைநிலை, உ வினையெச்ச விகுதி. நர், பெயர்
விகுதி. (20)

பழிபடு நறவந் தன்னைக்* கடைசியர் பருகிச் செவ்வாய்
மொழிதடு மாற வேர்வை முகத்தெழ முறுவ றோன்ற
விழிசிவந் துழலக் கூந்தன் மென்றுகில் சோர வுள்ளக்
கழிபெருங் களிப்பு நல்கிக் கலந்தவ ரொத்த+ தன்றே.

     (இ - ள்.) பழிபடு - நறவம் - பழிக்கப்படுகின்ற மதுவானது,
தன்னைக் கடைசியர் பருகி - தன்னை உழத்தியர்கள் பருகுதலால்,
செவ்வாய் மொழி தடுமாற - (அவர்கள்) சிவந்த வாயினின்று வருகிற
மொழிகள் தடுமாறவும், முகத்து வேர்வை எழு - முகத்தின்கண் குறு
வேர்வை எழவும், முறுவல் தோன்ற - (வாயின்கண்) நகை தோன்றவும்,
விழி சிவந்து உழல - விழகள் சிவந்துசுழலவும், கூந்தல் மென்துகில் சோர
- கூந்தலும் மெல்லிய ஆடையும் சரியவும், உள்ளம் கழிபெரும்களிப்பு
நல்கி - உள்ளத்தில் மிகப்பெரிய களிப்பை நல்குதலால், கலந்தவர்
ஒத்தது - புணர்ந்த தலைவரை ஒத்தது எ-று.

     நறவம் ஒத்தது என்க. மொழிதடுமாறல் முதலாயின கள்ளுண்
டார்கண்ணும் கலவிசெய்த மகளிர்கண்ணும் நிகழ்வன. பருகி, நலகி என்னும்
எச்சங்கள் காரணப் பொருளன. கூந்தல் மென்றுகில், எண்ணிடைச் சொல்
தொக்கது. கழிபெரு, ஒருபொருளிருசொல். ஒத்தார் என்பது பாடமாயின்
கடைசியர் எழுவாள். நறவம் செயப்படு பொருள். அன்று ஏ : அசை. (21)

பட்பகை யாகுந் தீஞ்சொற் கடைசியர் பவளச் செவ்வாய்க்
குட்பகை யாம்ப லென்று மொண்ணறுங் குவளை நீலங்
கட்பகை யாகு மென்றுங் கமலநன் முகத்துக+ கென்றுந்
திட்பகை யாகு மென்றுஞ் செறுதல்போற் களைதல் செய்வார்.

     (இ - ள்.) பண்பகையாகும் - பண்ணுக்குப் பகையாகிய, தீம் சொல் -
இனிண மொழிகளையுடைய, கடைசியர் - உழத்தியர்கள், பவளச்
செவ்வாய்க்கு - (தங்கள்) பவளம் போன்ற சிவந்த வாய்க்கு, ஆம் பல்
உள்பகை ஆகும் என்றும் - செவ்வல்லி மலர்கள் உட்பகையாகு மென்றும்,
கண் - கண்களுக்கு, ஒள் நறும் குவளை நீலம் - ஒள்ளிய நறிய
செங்குவளை மலர்களும் கருங்குவளை மலர்களும், பகை ஆகும் என்றும் -
பகையாய் உள்ளன வென்றும், நல் முகத்துக்கு - நல்ல முகத்திற்கு, கமலம்


     (பா - ம்.) * நறவந்தானே. +கலந்தவரொத்தார். + மென்முகத்துக்கு.