I


440திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



சிந்துகின்ற வடித்த பனி நீரை உடையவரும், வீசு பொன் வண்ணப்
பொடியினர் - வீசுகின்ற பொன்னிறப் பொடியினை உடையவரும், பூம் புகை
தீபம் ஏந்திய தொடி அணி கையினர் - அழகிய தூபத்தையும் தீபத்தையும்
ஏந்திய வளையலணிந்த கையினை உடையவருமாய், சூழ்ந்தார் -
மொய்த்தார்கள் எ - று.

     கொடிகள் போதும் பனிநீரும் சிந்துமாறு சிந்துவாரென்க. அழகிய
பொற்பொடியென்னலுமாம். ஏந்தப்பட்ட புகையையும் தீபத்தையும் உடைய
கையென்பதே சொற்றொடருக்கியைந்த பொருள். (169)

தோடவி ழோதியர் சோபன கீதம்
பாட விரைப்பனி நீரொடு சாந்தம்
ஏடவிழ் மென்மல ரிட்ட படத்திற்
பாடக மெல்லடி யைப்பைய வையா.

     (இ - ள்.) தோடு அவிழ் ஓதியர் சோபன கீதம் பாட - இதழ் விரிந்த
மலரையணிந்த கூந்தலையுடைய மகளிர் மங்கலப் பாட்டுப் பாட விரைப்பனி
நீரொடு சாந்தம் ஏடு - அவிழ் மெல் மலர் - மணம் பொருந்திய பனி நீருடன் சந்தனத்தையும் இதழ் விரிந்த மெல்லிய மலரையும், இட்ட படத்தில் - இட்ட
நடைப் பாவாடையில், பாடகம் மெல் அடியை பையவையா - பாடகமணிந்த
மெல்லிய திருவடிகளை மெல்லென வைத்து எ - று.

     மேல் மூன்று செய்யுளிற் கூறிய முற்றுக்களை எச்சப்படுத்தெண்ணி,
இச் செய்யுளிலுள்ள வையா என்பதனுடன் முடிக்க. (170)

செம்மல ராளொடு நாமக டேவி
கைம்மலர் பற்றின கல்வியொ டாக்கம்
இம்மையி லேபெறு வார்க்கிது போதென்
றம்மணி நூபுர மார்ப்ப நடந்தாள்.

     (இ - ள்.) செம்மலராளொடு நாமகள் - செந்தாமரை மலரில் வசிக்கும்
திருமகளையும் கலைமகளையும், தேவி கை மலர் பற்றின - இறைவியின்
கைகளாகிய மலர்கள் பற்றிக் கொண்டன ஆதலின், கல்வியோடு ஆக்கம்
இம்மையிலே பெறுவார்க்கு - கல்விப் பொருளையும் செல்வப் பொருளையும்
இப்பிறப்பிலே ஒரு சேரப் பெறுவார்க்கு, இது போது என்று அம் மணி
நூபுரம் ஆர்ப்ப நடந்தாள் - இதுவே சமயமென்று அழகிய மணிகள் பதித்த
நூபுரங்கள் ஒலிக்க நடந்தருளினார் எ - று.

     தேவியைப் பணிந்தால் இம்மையிலே செல்வமும் கல்வியும்
பெறலாமென்பது குறிப்பிட்டவாறு. போது - செவ்வி. இது
தற்குறிப்பேற்றவணி. (171)

ஒல்கினண் மெல்ல வொதுங்கின ளன்பு
பில்கி யிருந்த பிரானரு கெய்தி
மெல்கி யெருத்த மிசைத்தலை தூக்கிப்
புல்கிய காஞ்சி புலம்ப விருந்தாள்.