(இ
- ள்.) ஒல்கினள் மெல்ல ஒதுங்கினள் - அசைந்து மெல்ல
ஒதுங்கி, அன்பு பில்கி இருந்த பிரான் அருகு எய்தி - (தம்மேல்) அன்பு
நிறைந்திருந்த இறைவன் பக்கலிற் சென்று, மெல்கி - மென்மைக் குணம்
நிரம்பி, எருத்த மிசைத்தலை தூக்கி - பிடரின் மேல் தமது திருமுடியை
வைத்து, புல்கிய காஞ்சி புலம்ப இருந்தாள் - பொருந்திய காஞ்சி ஒலிக்க
அமர்ந்தருளினார் எ - று.
ஒதுங்கினள்
- நடந்தாள் : அநுவாதம். நாணத்தால் மென்மையுற்று
இருக்கும் பொழுது காஞ்சியொலித்தல் கூறினார். முன்னுள்ள முற்றுக்கள்
எச்சமாயின. (172)
[அறுசீரடியாசிரியவிருத்தம்]
|
அற்பக விமைக்குஞ்
செம்பொ னரதன பீடத் தும்பர்ப்
பொற்பக லாத காட்சிப் புனிதனோ டிருந்த நங்கை
எற்பகல் வலங்கொண் டேகு மெரிகதிர் வரையி னுச்சிக்
கற்பக மருங்கிற் பூத்த காமரு வல்லி யொத்தாள். |
(இ
- ள்.) அல்பக இமைக்கும் செம்பொன் அரதன பீடத்து உம்பர்
- இருள்கெட ஒளி வீசும் செம்பொன்னாலாகிய மணிகள் இழைத்த தவிசின்
மேல், பொற்பு அகலாத காட்சிப் புனிதனோடு - பொலிவு நீங்காத
தோற்றத்தையுடைய தூய இறைவனோடு, இருந்த நங்கை - இருந்த
பிராட்டியார், எரி கதிர் - ஒளியியையுடைய சூரியன், எல் பகல் வலம்
கொண்டு ஏகும் - இரவும் பகலும் வலமாகப் போகப் பெற்ற, வரையின்
உச்சி - மேரு மலையின் உச்சியில், கற்பக மருங்கில் - கற்பகத் தருவின்
பக்கத்திலே, பூத்த காமருவல்லி ஒத்தாள் - மலர்ந்த அழகிய கொடியினை
ஒத்தார் எ - று.
எற்பகல்
என்பதற்கு ஒளியையுடைய சூரியன் என்று பொருள் கூறி,
எரி கதிர் என்பதனை வரைக்கு அடையாக்கலுமாம். பூத்த -
பொலிந்தவென்றுமாம். பொற்பீடத்திற்கு மேருவும், இறைவற்குக் கற்பகமும்,
இறைவிக்கு வல்லியும் உவமம். காமவல்லியெனப் பெயருமாம். (173)
பண்ணுமின் னிசையு நீருந் தண்மையும் பாலும் பாலில்
நண்ணுமின் சுவையும் பூவு நாற்றமு மணியு மங்கேழ்
வண்ணமும் வேறு வேறு வடிவுகொண் டிருந்தா லொத்த
தண்ணலு முல்க மீன்ற வம்மையு மிருந்த தம்மா. |
(இ
- ள்.) அண்ணலும் உலகம் ஈன்ற அம்மையும் இருந்தது -
சிவபெருமானும் உலகங்களையெல்லாம் பெற்றருளிய அன்னையாகிய
பிராட்டியும் வெவ்வேறு வடிவங் கொண்டிருந்தது, பண்ணும் இன் இசையும்
- பண்ணும் இனிய இசையும், நீரும் தண்மையும் - நீரும் தட்பமும், பாலும்
பாலில் நண்ணும் இன்சுவையும் - பாலும் அப்பாலின்கட் பொருந்திய இனிய
சுவையும், பூவும் நாற்றமும் - பூவும் மணமும் மணியும் அம் கேழ்
வண்ணமும் - மணியும் அழகிய ஒளியும் (ஆகிய இவைகள்), வேறு வேறு
வடிவு கொண்டு இருந்தால் ஒத்தது - வேறு வேறாக வடிவங்கொண்டு
ஓரிடத்திலிருந்த தன்மையைப் போன்றது எ - று.
|