நண்ணும்
என்பதனைப் பண் முதலியவற்றோடுங் கூட்டி, அதன்கட்
பொருந்திய எனப் பொருளுரைத்து கொள்க. முழுமுதற் பொருளொன்றே
சிவமும் சத்தியுமெனத் தாதான்மியத்தால் இரு திறப்பட்டுப் பிரிப்பின்ற
நிற்பதாகலின் அதற்கு அங்ஙனம் பிரிப்பின்றி நிற்கும் பண்ணும் இசையும்
போல்வனவற்றை உவமை கூறினார்; 'தன்னை விளக்குவதூஉம் விடயங்களை
விளக்குவதூஉந் தானேயாகிய ஞாயிறொன்றுதானே விடயங்களை விளக்குழிக்
கதிரெனவும் தன்னை விளக்குழிக் கதிரோனெனவும் தாதான்மியத்தால் இரு
திறப்பட்டியைந்து நிற்றல் போலப் புறப்பொருளை நோக்காது அறிவு
மாத்திரையாய்த் தன்னியல்பி னிற்பதூஉம் புறப்பொருளை நோக்கி நிற்கு
நிலையிற் சத்தியெனவும், புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரையாய்
நிற்கு நிலையிற் சிவமெனவும் தாதான்மியத்தால் இரு திறப்பட்டியைந்து
நிற்குமென வுணர்க' என்னும் சிவஞானபோத
மாபாடிய வுரை இங்கு
நோக்கற்பாலது. இறைவனும் இறைவியும் ஒரு காரணம் பற்றி இங்ஙனம்
வெவ்வேறு வடிவு கொண்டிருப்ப தல்லது அவர் தம்முள்
வேறல்லரெனவுணர்க. கேழ் வண்ணம் - நிறம் : ஒரு பொருட் பன்மொழி;
ஈண்டு ஒளியை உணர்த்திற்று. அம்மா : வியப்பிடைச் சொல். (174)
விண்ணுளார்
திசையி னுள்ளார் வேறுளார் பிலத்தி னுள்ளார்
மண்ணுளார் பிறரும் வேள்வி மண்டபத் தடங்கி யென்றும்
பண்ணுளா ரோசை போலப் பரந்தெங்கு நிறைந்த மூன்று
கண்ணுளா ரடியினீழல் கலந்துளார் தம்மை யொத்தார். |
(இ
- ள்.) விண்ணுளார் - துறக்கத்திலுள்ளவர்களும், திசையின்
உள்ளார் - திக்குகளிலுள்ளவர்களும், வேறுளார் - ஏனைய
இடங்களிலுள்ளவர்களும், பிலத்தின் உள்ளார் - பாதலத்திலுள்ளவர்களும்,
மண்ணுளார் - நிலவுலகத்திலுள்ளவர்களும், பிறரும் - மற்றையோரும்,
வேள்வி மண்டபத்து அடங்கி - திருமண மண்டபத்தின்கண் (தம்முட்
பேதமின்றி ஒரு சேர) அடங்கி, என்றும் - எப்பொழுதும், பண்ணுள் ஆர்
ஓசை போலப் பரந்து - பண்ணின்கண் நிறைந்த இசை போலப் பரவி, எங்கு
நிறைந்த மூன்று கண்ணுளார் - எங்கும் நிறைந்து நிற்கும் மூன்று
கண்களையுடைய சிவபெருமானது, அடியின் நீழல் கலந்துளார் தம்மை
ஒத்தார் - திருவடி நீழலிற் கலந்தவரை ஒத்தார் எ - று.
திருவடி
நீழலிற் கலந்தார் தம்முள் வேற்றுமையின்றி அதன்கண்
அடங்கியிருத்தல் போல மண்டபத்துள் விரவினோரும் தம்முள்
வேற்றுமையின்றி அதன்கண் அடங்கியிருந்தாரென்க; மண்டபத்தின் விரிவு
கூறியதூஉமாயிற்று. பண்ணின்கண் ஓசை போல இறைவன் பரந்து நிறைந்து
அத்துவிதமாயிருக்குமியல்பினை,
"பண்ணையு
மோசையும் போலப் பழமதுவும்
எண்ணுஞ் சுவையும்போ னெங்குமாம்-அண்ணல்தாள்
அத்துவித மாத லருமறைக ளொன்றென்னா
தத்துவித மென்றறையு மாங்கு" |
என்னும்
சிவஞானபோதத்துள் வரும் திருவெண்பாவா னறிக.
(175)
|