I


திருமணப் படலம்443



ஆயபோ தாழி யங்கை யண்ணல்பொற் கரக நீராற்
சேயவான் சோதி யாடற் சேவடி விளக்கிச் சாந்தந்
தூயபோ தவிழச் சாத்தித் தூபமுஞ் சுடருங் கோட்டி
நேயமோ டருச்சித் தைய னிறையருள் பெற்று நின்றான்.

     (இ - ள்.) ஆயபோது - அப்பொபது, ஆழி அம் கை அண்ணல் -
திகிரிப் படையை அழகிய கையிற் கொண்ட திருமால், பொன் கரக நீரால் -
பொன்னாலாகிய கரகத்திலுள்ள நீரினால், சேய வான் சோதி - சிவந்த சிறந்த
ஒளிப் பிழம்பாகிய இறைவனது, ஆடல் சேவடி விளக்கி - திருக்கூத்தாடும்
சிவந்த திருவடிகளை விளக்கி, சாந்தம் தூய போது அவிழச்சாத்தி -
சந்தனத்தையும் புனிதமான மலர்களையும் மணம் வீசச் சாத்தி, தூபமும்
சுடரும் கோட்டி - தூப தீபங்களை (விதிமுறையாய்) சுழற்றி, நேயமோடு
அருச்சித்து - அன்போடு அருச்சனை செய்து, ஐயன் நிறை அருள் பெற்று
நின்றான் - இறைவனுடைய நிறைந்த அருளைப் பெற்று நின்றான் எ - று.

     அங்கை - அகங்கையுமாம். சேய - செம்மையாகிய; விகாரமில்லாத
என்றுரைத்தலுமாம். அவிழ - விரிய; மணமென்பது வருவிக்க. கோட்டி -
வளைத்து; சுழற்றியென்றபடி. (176)

விண்டலத் தவரு ளாதி வேதியன் பாத தீர்த்தம்
முண்டகத் தவனு மாலு முனிவரும் புரிந்த ராதி
அண்டரு நந்தி தேவு மடுகணத் தவரு மேனைத்
தொண்டரும் புறம்பு முள்ளு நனைத்தனர் சுத்தி செய்தார்.

     (இ - ள்.) விண் தலத்தவருள் ஆதி வேதியன் - தேவர்களில்
முதன்மை பெற்ற அந்தணனாகிய இறைவனது, பாத தீர்த்தம் - திருவடித்
தீர்த்தத்தால், முண்டகத்தவனும் மாலும் - தாமரை மலரில் வசிக்கும் பிரமனும்
திருமாலும் முனிவரும் - முனிவர்களும், புரந்தர ஆதி அண்டரும் - இந்திரன்
முதலான தேவர்களும், நந்தி தேவும் - திருநந்தி தேவரும், அடு கணத்தவரும் - அவரை அடுத்த சிவகணங்களும், ஏனைத் தொண்டரும் - மற்றை
அடியார்களும், புறம்பும் உள்ளும் நனைத்தனர் சுத்தி செய்தார் - தங்கள்
புறத்தையும் அகத்தையும் நனைத்துத் தூய்மையாக்கினார்கள் எ - று.

     சிவபெருமானைத் தேவர்களுள் அந்தணனென்று மெய்ந் நூல்கள் கூறும். அடு கணம் : அடுத்த கணம் என வினைத்தொகை; இங்ஙனம் அருகியன்றி
வாராது. தலையிற்றெளித்து உள்ளும் பருகினாரென்பார் 'புறம்பும் உள்ளும்
நனைத்தனர்' என்றார். நனைத்தனர் : முற்றெச்சம். (177)

அத்தலை நின்ற மாயோ* னாதிசெங் கரத்து நங்கை
கைத்தலங் கமலப் போது பூத்ததோர் காந்த ளொப்ப
வைத்தரு மனுவா யோதக் கரகநீர் மாரி பெய்தான்
தொத்தலர் கண்ணி விண்ணோர் தொழுதுபூ மாரி பெய்தார்.

     (பா - ம்.) * அனாதி.