(இ
- ள்.) புத்தனார் எறிந்த கல்லும் - சாக்கிய நாயனார் எறிந்த
கல்லையும், போது என மிலைந்த வேத வித்தனார் - மலரைப் போலச்
சூடியருளிய வேத காரணராகிய இறைவனது, அடிக்கீழ் வீழ - திருவடியின்
கீழ் வீழுமாறு, விண்ணவர் முனிவர் ஏனோர் - தேவர்களும் முனிவர்களும்
மற்றையரும், சுத்தநா ஆசி கூறி - புனித நாவினால் ஆக்க மொழி கூறி.
குங்குமத் தோயம் தோய்ந்த - குங்கும நீரில் நனைந்த, முத்தவால் அரிசி
வீசி - முத்துப் போன்ற வெள்ளிய அரிசியை வீசி, போக வெள்ளம்
மூழ்கினார் - இன்ப வெள்ளத்தில் அழுந்தினார்கள் எ - று.
புத்தனார்
- சாக்கிய நாயனார்; பெரிய புராணத்திற்
கூறப்பட்ட தனி
யடியார்களில் ஒருவர்; இவர் ஒரு கால் சிவலிங்கப் பெருமானைக் கண்டு
அன்பு மீக் கூர்ந்து பதைத்துக் கல்லெறிந்தவர், அது திருவருட் குறிப்பால்
நிகழ்ந்ததெனக் கொண்டு பின்பு நாடொறும் மறவாதுகல் லெறிதலாகிய
திருத்தொண்டினைச் செய்து முத்தி பெற்றார்; இதனை
"வார்கொண்ட
வனமுலையா ளுமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கு மடியேன்" |
என்னும் திருத்தொண்டத்
தொகையா லறிக. இவர் தாம் முன்பிருந்த புத்த
சமயக் கோலத்தோடிருந்தே வழிபட்டமையின் சாக்கியரெனப்பட்டார்.
சாக்கியர் என்பது பௌத்தருக்கொரு பெயர். வேதவித்து -
வேதங்களையறிந்தவனுமாம். அடிக்கீழ் வீழ அரிசி வீசியென்க. (180)
அம்மையோ டப்ப னென்ன வலர்மணம் போல நீங்கார்
தம்மருள் விளையாட் டாலே யாற்றநாட் டமியர் போல
நம்மனோர் காணத் தோன்றி நன்மணம் புணர ஞாலம்
மும்மையு முய்ந்த வென்னாத் தத்தமின் மொழிய லுற்றார். |
(இ
- ள்.) அம்மையோடு அப்பன் என்ன - அம்மையும்
அப்பனுமென்று, அலர்மணம் போல நீங்கார் - பூவும் மணமும் போலப்
பிரியாதவராகிய பெருமானும் பிராட்டியும், தம் அருள் விளையாட்டாலே -
தமது அருள் விளையாடலினால், ஆற்ற நாள் தமியர் போல நம்மனோர்
காணத் தோன்றி - மிகவும் பலவாகிய நாள் பிரித்தவர் போல நம் போன்றார்
காணுமாறு தோன்றி, நல் மணம் புணர - நல்ல திருமணஞ் செய்தருள,
ஞாலம் மும்மையும் உய்ந்த என்னா - மூன்று உலகங்களும் ஈடேறின என்று,
தத்தமில் மொழியல் உற்றார் - யாவரும் தங்கள் தங்களுக்குள் கூறி
மகிழ்ந்தனர் எ - று.
என்ன
- என்று, இதனாலும் தாதான்மியத்தான் இருதிறப்பட்டியைந்து
நிற்குந் தன்மை கூறினார். இங்ஙனம் பிரிப்பின்றியிருந்து அம்மையும்
அப்பனும் எனப்படுதலை,
"அம்மையப்ப
ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக" |
என்னும் திருக்களிற்றுப்படியாரா
லறிக. ஆற்ற : மிகவெனப் பொருள்படும்
உரிச்சொல்; செய வெனச்சமாகும்;
"ஆற்றவும் பழையதுன்
னங்கை வச்சிரம்" |
என இந்நூலுள்ளும்,
|