I


446திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



"ஆற்றநாள் போக்கினேனே"

எனத் தேவாரத் துள்ளும் வருதல் காண்க; மிக நாள் என இமையாமையின்
ஈண்டு மிகவும் பலவாகிய என விரிக்கப்பட்டது. புணர - புணர்தலால்.
ஞாலம் ஈண்டு உலகப் பொது. மும்மை : மை பகுதிப் பொருள் விகுதி. (181)

காமரு சுரபித் தீம்பால் கற்பகக் கனிநெய் கன்னல்
நாமரு சுவைய வின்ன நறுமது பருக்கஞ் செம்பொன்
ஆமணி வட்டத் திண்காற் பாசனத் தமையப் பெய்து
தேமரு கொன்றை யானைத் திருக்கைதொட் டருள்க வென்றார்.

     (இ - ள்.) காமரு சுரபித் தீம்பால் - அழகிய காமதேனுவின் இனியய
பாலும், கற்பகக் கனி - கற்பகம் அளித்த பழமும், நெய் கன்னல் - நெய்யும்
சருக்கரையும் ( கலந்த), நாமரு சுவைய இன்ன நறுமது பருக்கம் - நாவிற்குப்
பொருந்திய சுவையையுடைய இந்த நறிய மது பருக்கத்தை, செம்பொன் ஆம்
மணி வட்டம் திண்கால் பாசனத்து - செம்பொன்னாலாகிய மணிகள் இழைத்த
வட்டமாகிய வலிய காலையுடைய கலத்தின்கண், அமையப் பெய்து -
பொருந்த இட்டு, தேமரு கொன்றை யானை - தேன் பொருந்திய கொன்றை
மாலையையணிந்த சிவபெருமானை, திருக்கை தொட்டருள்க என்றார் -
திருக்கை தொட்டருள்க என்று வேண்டினர் எ - று.

     காமரு சுரபி - கற்பகக் காவிற் பொருந்திய சுரபியென்றுமாம்; கற்பகம்
அளித்த கனியென்க. இவற்றை மது பர்க்கம் என்ப. பாசனம் - உண் கலன்.
திருக்கை தொட்டருள்க - உண்க : மரபு. நாமருவு, தேமருவு என்பன உகரந்
தொக்கு நின்றன. (182)

அங்கைவைத் தமுது செய்தாங் ககமகிழ்ந் தட்ட மூர்த்தி
கொங்கவிழ் குமுதச் செவ்வாய் கோட்டிவாண் முறுவல்பூத்தான்
புங்கவர் முனிவர் கற்பின் மகளிரும் போதின் மேய
மங்கைய ரிருவ ரோடு மங்கலம்பாட லுற்றார்.

     (இ - ள்.) அட்ட மூர்த்தி - எட்டு மூர்த்தங்களையுடையவன், அம்
கை வைத்து - அழகிய கை யாற் றொட்டருளி, அமுது செய்தாங்கு
அகமகிழ்ந்து - அமுது செய்தருளினாற் போல மன மகிழ்ந்து, கொங்கு அவிழ்
குமுதச் செவ்வாய் கோட்டி - மணத்தொடு மலர்ந்த ஆம்பல் போன்ற சிவந்த
திருவாயைக் குவித்து, வாள் முறுவல் பூத்தான் - ஒள்ளிய புன்னகை
செய்தருளினான்; புங்கவர் முனிவர் கற்பின் மகளிரும் -
தவத்தாலுயர்ந்தவராகிய முனிவர்களின் பன்னியர்களும், போதில் மேய
மங்கையர் இருவரோடு - தாமரை மலரில் வசிக்கும் திருமகளும் கலைமகளும்,
மங்கலம் பாடலுற்றார் - மங்கலம் பாடத் தொடங்கினார்கள் எ-று.

     புங்கவர் - தேவருமாம். (183)