மாக்கடி முளரி வாணன் மைந்தரோ டொருங்கி வைகி
நாக்களி னடுநா வாரத் துடுவையா னறுநெ யார்த்தி
வாக்கிட வார மாந்தி வலஞ்சுழித் தகடு வீங்கித்
தேக்கிடு மொலியி னார்த்து நிமிர்ந்தது தெய்வச் செந்தீ. |
(இ
- ள்.) மாக் கூடி முளரிவாணன் - பெருமை பொருந்திய
மணமுடைய தாமரை மலரில் வசிக்கும் பிரமன், மைந்தரோடு ஒருங்கு
வைகி - புதல்வர்களோடு ஒரு சேர இருந்து, நாக்களின் நடுநா ஆர - ஏழு
நாக்களில் நடு நாவால் சுவையறியுமாறு, துடுவையால் நறுநெய்
ஆர்த்திவாக்கிட - சுருக்கு சுருவங்களால் நறியநெய்யை நிரப்பி வார்க்க,
தெய்வச் செந்தீ - தெய்வத் தன்மையுடைய சிவந்த தீயானது, ஆர மாந்தி -
நிரம்ப உண்டு, வலம் சுழித்து - வலமாகச் சுழித்து, அகடு வீங்கி - வயிறு
நிரம்பி, தேக்கிடும் ஒலியின் ஆர்த்து - தேக்கெறியும் ஒலி போல ஒலித்து,
நிமிர்ந்தது - மேலெழுந்தோங்கியது எ - று.
வாணன்
- வாழ் நன். மைந்தர் இவரென்பது புராண வரலாற்றுள்
உரைக்கப்பட்டது. ஆர்த்தி - நிறையச் செய்து. தேக்கெறிதலை இப்பொழுது
ஏப்பமிடல் என்பர். செந்தீத் தெய்வம் என மாற்றுதலுமாம். (184)
சுற்றுநான் மறைக ளார்ப்பத் தூரியஞ் சங்க மேங்கக்
கற்றநான் முகத்தோன் வேள்விச் சடங்குநூல் கரைந்த வாற்றான்
முற்றமங் கலநாண் சாத்தி முழுதுல கீன்றாள் செங்கை
பற்றினன் பற்றி லார்க்கே வீடருள் பரம யோகி. |
(இ
- ள்.) சுற்றும் நால் மறைகள் ஆர்ப்ப - நான்கு புறத்திலும் நான்கு
வேதங்களும் ஒலிக்கவும், தூரியம் சங்கம் ஏங்க - இயங்களும் சங்கங்களும்
ஒலிக்கவும், கற்ற நான் முகத்தோன் - வேதங்களை உணர்ந்த பிரமன், நூல்
கரைந்த வாற்றால் - வேத சிவாகமம் கூறிய முறையால், வேள்விச் சடங்கு
முற்ற - திருமணச் சடங்குகளைக் குறைவின்றி முடிக்க, பற்று இலார்க்கே
வீடு அருள் பரமயோகி - இரு வகைப் பற்றும் அற்றவர்க்கே வீட்டின்பத்தை
அருளும் பரமயோகியாகிய இறைவன், மங்கல நாண் சாத்தி - திருமங்கல
நாணைப் பூட்டி, முழுது உலகு ஈன்றாள் செங்கை பற்றினன் - எல்லா
உலகங்களையும் பெற்றருளிய பிராட்டியாரின் சிவந்த திருக்கரங்களைப்
பற்றியருளினான் எ - று.
முற்றுவிக்க
என்பது முற்றவென நின்றது. இறைவன் யோகியாயிருத்தல்
உயிர்களுக்கு முத்தியளித்தற் பொருட்டன்றித் தனக்கொரு பயன்
கருதியன்றென்பார் 'வீடருள் பரமயோகி' என்றார்;
"யோகியா யின்பமுத்தி
யுதவுத லதுவு மோரார்" |
எனச் சிவஞான
சித்தியார் கூறுவது காண்க. உலகங்களையெல்லாம்
ஈன்றவளை மணந்தானென்பதும் பற்றற்றவர்க்கே அருளும்
பரமயோகியாயுள்ளவன் ஒருத்தி செங்கை பற்றினனென்பதும் முரணாகி அணி
செய்தல் காண்க. கை பற்றுதல் - பாணிக்கிரகணம். ஏகாரம் பிரிநிலை. (185)
|