இணரெரித் தேவுந் தானே யெரிவளர்ப் பவனுந் தானே
உணவுகொள் பவனுந் தானே யாகிய வொருவன் வையம்
புணர்வுறு போக மூழ்கப் புருடனும் பெண்ணு மாகி
மணவினை முடித்தா னன்னான் புணர்ப்பையார் மதிக்க வல்லார். |
(இ
- ள்.) இணர் எரித் தேவும் தானே - பல சுடரையுடைய தீக்
கடவுளுந்தானே, எரி வளர்ப்பவனும் தானே - அத்தீயை வளர்க்கின்றவனும்
தானே, உணவு கொள்பவனும் தானே - அத் தீ முகமாக அவியைக்
கொள்ளுபவனும் தானே, ஆகிய ஒருவன் - ஆகிய இறைவன் ஒருவனே,
வையம் புணர்வுறு போகம் மூழ்க - உயிர்கள் புணர்தல் பொருந்திய
போகத்தில் அழுந்த, புருடனும் பெண்ணுமாகி - ஆணும் பெண்ணுமாகி,
மணவினை முடித்தான் - மணச் செயலை முடித்தருளினான்; அன்னான்
புணர்ப்பை மதிக்க வல்லார் யார் - அவ்விறைவனது செயலை அளந்தறிய
வல்லவர் யாவர் (ஒருவருமில்லை என்றபடி) எ - று.
இப்புராணத்தில்
முன் வந்துள்ள,
"பூசையும்
பூசைக் கேற்ற பொருள்களும் பூசை செய்யு
நேசனும் பூசை கொண்டு நியதியிற் பேறு நல்கும்
ஈசனு மாகிப் பூசை யான்செய்தே னெனுமென் போத
வாசனை யதுவு மான மறைமுத லடிகள் போற்றி" |
என்னுஞ் செய்யுட் பொருள்
இதனொடு ஒத்து நோக்கற்பாலது. இதன்
முன்னிரண்டடியிற் கூறிய பொருள்,
"வேதமும் வேள்வியு
மாயினார்க்கு" |
எனத் திருவாசகத்துள்
சுருங்க வுரைக்கப்பட்டது.
"வேள்வியுந்
தானே வேள்விப் பொருள்களுந் தானே வெய்ய
வேள்விவேட் பவனுந்தானே வேள்விகொ ளிறையுந் தானே
வேள்வியின் பயனுந் தானே யென்பது விளக்கி யெம்மான்
வேள்விசெய் தீக்கை யுற்றான் விளங்கருட் சத்தி யோடும்"
|
எனக் காஞ்சிப்புராணத்துள்
இது விரித்துரைக்கப்பட்டது. இறைவன்
இங்ஙனம் மணம் புரிந்தது உயிர்களுக்குப் போகம் அருளுதற் பொருட்டன்றித்
தனக்கொரு பயன் கருதியன்றென்பார் 'வையம் போக மூழ்க மணவினை
முடித்தான்' என்றார்.
"போகமா யிருந்துயிர்க்குப்
போகத்தைப் புரித லோரார்" |
எனச் சித்தியார்
கூறுவதுங் காண்க. புணர்ப்பு - சூழ்ச்சி. (186)
பபின்புதன் பன்னி யோடு பிறைமுடிப் பெருமான் கையில்
நன்பொரி வாங்கிச் செந்தீ நாமடுத் தெனைத்து மான
தன்படி வுணர்ந்த வேத முனிவர்க்குத் தக்க தானம்
இன்பகந் ததும்ப நல்கி யெரிவல முறையால் வந்து. |
|