என்றும் திண்பகை
ஆகும் என்றும் - தாமரை மலர்கள் எப்போதும்
திண்ணிய பகையாயுள்ளன வென்றும், செறு தல்போல் களைதல் செய்வார்
- அழித்தல் போல அவற்றைக் களைவா ராயினர் எ - று.
உட்பகை
- புறந்தோன்றாத பகை, உள்ளிடத்திற்குப் பகை. ஆம்
பல் முதலியன அவற்றின் மலருக்கு ஆகுபெயர். களைதல் - முதலொடும்
போக்குதல். திண்பகை யெனற்பாலது எதுகை நோக்கி வலித்தது. (22)
கடைசியர் முகமுங் காலுங் கைகளுங் கமல மென்னார்
படைவிழி குவளை யென்னார் பவளவாய் குமுத மென்னார்
அடையவுங் களைந்தார் மள்ளர் பகைஞரா யடுத்த வெல்லை
உடையவ னாணை யாற்றா லொறுப்பவர்க் குறவுண் டாமோ. |
(இ
- ள்.) மள்ளர் உழவர்கள், கமலம் - தாமரை மலர்கள், கடைசியர்
- (தங்கள்) உழத்தியரின், முகமும் காலும் கைகளும் என்னார் - முகம் கால்
கைகள் ஆகுமென்று கருதாமலும். குவளை - நீலமலர்கள், படைவிழி
என்னார் - வேல் போன்ற கண்கள் ஆகுமென்று கருதாமலும், குமுதம் -
செவ்வல்லி மலர்கள், பவளவாய் என்னார் - பவளம் போன்ற வாய்கள்
ஆகுமென்று கருதாமலும், அடையவும் களைந்தார் - (அவைகளை) முற்றவும்
களைந்தார்கள்; பகைஞராய் அடுத்த எல்லை - (உறவினராயினும்)
பகைவராய்வந்த காலத்தில், உடையவன் ஆணை ஆற்றால் - ஆண்டானது
ஏவல்வழி நின்று, ஒறுப்பவர்க்கு உறவு உண்டாமோ - தண்டிப்பவர்க்கு
அவ்வுறவை நினைத்தல் கூடுமோ (கூடாது) எ - று.
என்னார்
என்பன முற்றெச்சங்கள். உண்டாமோ, ஓ : எதிர்மறை.
வேற்றப் பொருள்வைப்பணி.
"பண்கள்வாய் மிழற்று மின்சொற் கடைசியர் பரந்து நீண்ட
கண்கைகான் முகம்வா யொக்குங் களையலாற் களையிலாமை
உண்கள்வார் கடைவாய் மள்ளர் களைகலா துலாவி நிற்பார்
பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றார்" |
என்னும் கம்பராமாயனச்
செய்யுட் கருத்து இதில் வேறுவகையாற்
கூறப்பட்டமை காண்க. (23)
புரையற வுணர்ந்தோர் நூலின் பொருளினுள் ளடங்கி யந்தூல்
வரையறை கருத்து மான வளர்கருப் புறம்பு தோன்றிக்
கரையமை கல்வி சாலாக் கவிஞர்போ லிறுமாந் தந்நூல்
உரையென விரிந்து கற்பின் மகளிர்போ லொசிந்த தன்றே. |
(இ
- ள்.) வளர்கரு - வளர்கின்ற கருவானது, புரையற உணர்ந்தோர்
நூலின் பொருளின் - (ஐயந்திரிபாகிய) குற்றம் நீங்கக் கற்றுணர்ந்தோர்
(இயற்றிய) நூலின்கண் (உள்ளடங்கியிருக்கும்) பொருள்போல, உள் அடங்கி
- அகத்திலடங்கி நின்று, அந்நூல் வரை அறை - அந்நூற் பொருளினளவைத்
தெரிக்கின்ற, கருத்துமான - கருத்துரையின் தோற்றம்போல, புறம்பு தோன்றி
- வெளித்தோன்றி, கரை அமை கல்வி சாலா - இலக்கணவரம்பு அமைந்த
கல்வி நிறை யாத, கவிஞர் இறுமாந்து - புன்கவிஞர் (இறுமாத்தல்)
|