I


450திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     எல்லா முழுமுதன்மையுமுடைய இறைவன் இங்ஙனம் சடங்குகளெல்லாம்
செய்தது தானியற்றிய வேத நெறியை உயிர்களெல்லாம் உணர்ந்து
கடைப்பிடித்து உய்தற் பொருட்டென்பார் 'உலகந் தேற ஆற்றி' என்றார்.
'காமனைக் காய்ந்த நம்பி மங்கையோடு மணவறை தன்னிற் புக்கான்' என
முரணென்னும் அணி தோன்றக் கூறினார்; இதனால் இறைவன் காம விகார
மில்லாதவனென்னுங் கருத்தும், இறைவன் இறைவியைக் கூடியிருந்துழி யல்லது
உயிர்கட்கு வேட்கை விளைவிக்குமாற்றலும் காமனுக்கின்றென்னுங் கருத்தும்
போதருதல் காண்க.

"கண்ணுத லியோகி ருப்பக்காமனின் றிடவேட் கைக்கு
விண்ணுறு தேவ ராதி மெலிந்தமை யோரார் மால்தான்
எண்ணிவேண் மதனை யேவ வெரிவிழித் திமவான் பெற்ற
பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப் பேரின்ப மளித்த தோரார்"

என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தமும் நோக்குக. இங்ஙன் : ஈறு
தொக்கது. (189)

மனிதரு மிமையா தையன் மங்கல வனப்பு நோக்கிப்
புனிதவா னவரை யொத்தா ரவர்க்கது புகழோ வெந்தை
கனிதரு கருணை நாட்டம் பெற்றவர் கடவு ளோராற்
பனிதரு மலரிட் டேத்தி வழிபடற் பால ரன்றோ.

     (இ - ள்.) மனிதரும் - மக்களும், இமையாது - கண் இமையாமல்,
ஐயன் மங்கல வனப்பு நோக்கி - இறைவனது திருமணக் கோலப்
பொலிவினைப் பார்த்து, புனித வானவரை ஒத்தார் - தூய தேவர்களை
ஒத்தனர்; அவர்க்கு அது புகழோ - அம் மக்களுக்குத் தேவரையொத்தன
ரென்பது ஒரு புகழாமோ, எந்தை கனிதரு கருணை நாட்டம் பெற்றவர் -
எம்பெருமானாகிய சோமசுந்தரக் கடவுளின் முதிர்ந்த அருட் பார்வையைப்
பெற்ற மக்கள், கடவுளோரால் - தேவர்களால், பனி தரும் மலர் இட்டு ஏத்தி
வழிபடற் பாலர் அன்றோ - குளிர்ந்த மலரால் அருச்சித்துத் துதித்து வழிபாடு
செய்யப் பெறும் தன்மையையுடையவர் அல்லவா எ - று.

     வானவர் இமையா நாட்டமுடையராகலின் 'வானவரை யொத்தார்'
என்றார். புகழோ என்பதில் ஓகாரம் எதிர்மறை. அன்று என்பது உண்டு
என்பது போல் திணைபால்களுக்குப் பொதுவாய் நிற்றலின் வழா நிலையென்க. இரண்டு எதிர் மறை ஓர் உடன்பாடாயிற்று. (190)

மானிட ரிமையோ ரென்னும் வரம்பில ராகி வேள்வி
தானிட ரகல நோக்கித் தலைத்தலை மயங்கி நின்றார்
கானிட நடனஞ் செய்யுங் கண்ணுத லருட்க ணோக்கால்
ஊனிட ரகலு நாளி லுயர்ந்தவ ரிழிந்தோ ருண்டோ.

     (இ - ள்.) மானிடர் இமையோர் என்னும் வரம்பு இலராகி - மக்கள்
தேவர் என்னும் வரம்பில்லாதவராய், வேள்வி - திருமணத்தை, இடர் அகல
நோக்கி - துன்பம் நீங்குமாறு கண்டு, தலைத்தலை மயங்கி நின்றார் -