மெய்ம்மைநூல் வழியே கோயில் விதித்தருட் குறிநி றீஇப்பேர்
இம்மையே நன்மை நல்கு மிறையென நிறுவிப் பூசை
செம்மையாற் செய்து நீப வனத்துறை சிவனைக் காலம்
மும்மையுந் தொழுது வைய முழுவதுங் கோன டாத்தும். |
(இ
- ள்.) மெய்ம்மை நூல் வழியேய கோயில் விதித்து - உண்மை
நூலின் நெறிப்படியே திருக்கோயிலெடுத்து, அருள் குறி நிறீஇ - அருள்
வடிவாகிய சிவலிங்கத்தை நிலை பெறுத்தி, இம்மையே நன்மை நல்கும் இறை
எனப் பேர் நிறுவி - இம்மையே பேறு தரும் இறைவன் என்று திருப்பெயர்
இட்டு, செம்மையால் பூசை செய்து - முறைப்படி பூசனை புரிந்து, நீப வனத்து
உறை சிவனை - கடம்ப வனத்திலுறைகின்ற சோமசுந்தரக் கடவுளை, காலம்
மும்மையும் தொழுது - மூன்று காலங்களிலும் வணங்கி, வையம் முழுவதும்
கோல் நடாத்தும் - உலக முற்றும் தனது செங்கோலை நடாத்தியருளுவான்
எ - று.
மெய்ம்மை
நூல் - ஆகமமும், அதன் வழிப்பட்ட சிற்ப நூலும். பேர்
நிறுவி வழிபட்ட இச்செய்தி,
"முலைமூன்
றணைந்த சிலைநுதற் றிருவினை
அருமறை விதிக்கத் திருமணம் புணர்ந்து
மதிக்குலம் வாய்த்த மன்னவ னாகி
மேதினி புரக்கும் விதியுடை நன்னாள்
நடுவூர் நகர்செய் தடுபவந் துடைக்கும்
அருட்குறி நிறுவி யருச்சனை செய்த
தேவர் நாயகன்" |
எனக் கல்லாடத்துட்
கூறப்படுதலுங் காண்க. (197)
பூவரு மயன்மா லாதிப் புனிதரு முனிவ ரேனோர்
யாவருந் தனையே பூசித் திகபர மடைய நின்ற
மூவருண் மேலா முக்கண் மூர்த்தியே பூசை செய்த
தாவர விலிங்க மேன்மைத் தகுதியா ரளக்க வல்லார். |
(இ
- ள்.) பூவரும் அயன்மால் ஆதிப் புனிதரும் - தாமரை மலரில்
வசிக்கும் பிரமன் திருமால் முதலிய தேவர்களும், முனிவர் ஏனோ யாவரும்
- முனிவரும் மற்றைய அனைவரும், தனையே பூசித்து இகபரம் அடைய
நின்ற - தன்னையே வழிபட்டு, இம்மை மறுமைப் பயன்களை அடையுமாறு
அருள் புரிந்து நின்ற, மூவருள் மேலாம் முக்கண் மூர்த்தியே-மூவருக்கும்
மேலான முக்கண்ணனாகிய இறைவனே, பூசை செய்த தாவர இலிங்க
மேன்மைத் தகுதி அளக்க வல்லார் யார் - வழிபட்ட நிலைபெற்ற
இலிங்கத்தின் சிறப்புத் தன்மையை அளந்து கூற வல்லவர் யார்
(ஒருவருமில்லை யென்றபடி) எ - று.
"மூவர்
கோனாய் நின்ற முதல்வன்" எனத்
திருவாதவூரடிகள் கூறுதல்
நோக்கி, 'மூவருள் மேலாம்' என்பதற்கு மூவருக்கும் மேலான
என்றுரைக்கப்பட்டது; மூவருள்ளேயெனினும் இழுக்கின்றென்க. தாவரமாகிய
இலிங்கமென்க. (198)
|