இறைவி
அறவுருவினளென்பது 'அறப்பெருஞ் செல்வி, என முற்
கூறியிருத்தலானுமறிக. 'புண்ணியக்கொடி வண்டார்ப்பப் பூத்தல்போல்' என
முற்போந்த தொடருடன் 'புண்ணிய மலர்மென் கொம்பை' என்னுமிதனை
ஒத்து நோக்குக. நண்ணுதிர் : படர்க்கையில் முன்னிலை வந்த வழுவமைதி.
என்னலோடும் - என்று அவர்கட்குக் கட்டளையிட்டவளவில். நண்ணுவார் :
பெயர். (2)
பொன்னவிர்
கமலம் பூத்த புனிதநீ ராடித் தத்தம்
நன்னெறி நியம முற்றி நண்ணினார் புலிக்கா லோனும்
பன்னக முனியுந் தாழ்ந்து பரவியம் பலத்து ளாடும்
நின்னரு ணடங்கண் டுண்ப தடியேங்க ணியம மென்றார். |
(இ
- ள்.) அவிர் பொன் கமலம் பூத்த புனித நீர் ஆடி - விளங்கா
நின்ற பொற்றாமரை மலர்ந்த தூய வாவியில் நீராடி, நல் நெறி தத்தம் நியமம்
முற்றி நண்ணினார் - நல்ல நெறிப்படியே தங்கள் தங்கள் நியமங்களை
முடித்து வந்தனர்; புலிக்காலோனும் பன்னக முனியும் - வியாக்கிரபாத
முனிவரும் பதஞ்சலி முனிவரும், தாழ்ந்து பரவி - விழுந்து வணங்கித்
துதித்து, அம்பலத்துள் ஆடும் - சிற்றம்பலத்தின் கண் ஆடப்பெறுகின்ற,
நின் அருள் நடம் கண்டு - தேவரீரது கருணைத் திருக்கூத்தினைக் கண்டபின்,
உண்பது அடியேங்கள் நியமம் என்றார் - அருந்துவது அடியேங்களுடைய
நியமம் என்று கூறினர் எ - று.
நியமம்
- கடன், முறைமை. அருள் நடம் - உயிர்களை வாழ்விக்கும்
பெருங் கருணையாற் புரியும் திருக்கூத்து. உண்பது : தொழிற் பெயர். (3)
என்னலு மந்தந்
கூத்தை யிங்குநாஞ் செய்துந் தில்லைப்
பொன்னக ருலக மெல்லா முருவமாம் புருடற் குள்ளம்
இன்னதாந் துவாத சாந்த மென்றிறை யருளிச் செய்ய
மன்னவ வேனை யங்கம் யாவென மன்னன் சொல்வான். |
(இ
- ள்.) என்னலும் - என்று கூறிய வளவிலே, இறை - இறைவன்,
அந்தக் கூத்தை இங்கு நாம் செய்தும் - அந்நடத்தினை இம் மதுரைப்
பதியிலே யாம் செய்வோம்; உலகம் எல்லாம் உருவம் ஆம் புருடற்கு -
உலக மனைத்தும் வடிவமாகிய புருடனுக்கு, பொன் தில்லை நகர் உள்ளம் -
அழகிய தில்லையம்பதியானது இதயமாகும்; இன்னது துவாத சாந்தம் ஆம்
என்று அருளிச் செய்ய - இம் மதுரைப் பதி துவாத சாந்தமாகும் என்று
அருளிச் செய்ய (முனிவர்கள்), மன்னவ ஏனையங்கம் யா என - அரசே
மற்றைய உறுப்புக்கள் யாவை என்று கேட்க, மன்னன் சொல்வான் -
இறைவனாகிய சுந்தர பாண்டியன் கூறுவான் எ - று.
செய்தும்
- செய்வோம்; தன்மைப் பன்மை யெதிர்காலமுற்று.
உலகமெல்லாம் உருவமாம் புருடன் - உலக புருடன்; விராட் புருடன் துவாத
சாந்தம் - உச்சிக்கு மேற் பன்னிரண்டு அங்குல அளவிலுள்ளது : தீர்க்கசந்தி;
தல விசேடப் படலம் 21-ஆம் செய்யுளுரை நோக்குக. (4)
|