I


வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்459



முறையினா லென்னின் முன்னர்த்தோன்றிய முறையாலென்றக்
கறையறு தவத்த ரோடு கவுரியன் கோயில் புக்கான்.

     (இ - ள்.) பிறை தவழ் கயிலைக்குன்றம் பிரம ரந்திரம் ஆம் -
சந்திரன் தவழும் திருக்கயிலை மலை பிரமரந்திரத் தானம் ஆகும்; வேதம்
அறை தரு மதுரை துவாத சாந்தம் - மறைகள் கூறுகின்ற இம் மதுரைப்பதி
துவாத சாந்தத் தானமாகும், ஈது எந்த முறையினால் அதிகம் என்னில் -
இஃது எந்த வகையினால் மேலாகியதென்றால், முன்னர்த் தோன்றிய
முறையால் என்று - முதலில் உண்டாகிய காரணத்தாலென்று கூறி, அகறை
அறு தவத்தரோடு - அந்தக் குற்றமற்ற தவத்தினையுடைய முனிவரோடு,
கவுரியன் கோயில் புக்கான் - சுந்தர பாண்டியன் திருக்கோயிலுட்
புகுந்தருளினான் எ - று.

     பிரமரந்திரம் - பிரமநாடி; சுழுமுனையின் உச்சியாகிய இடம். ஈது
அதிகமாம் என வேறு தொடராக்கலும் பொருந்தும். (7)

தன்னரு ளதனா னீத்த தன்னையே தேடிப் போந்த
மின்னவிர் கயிலை தானோ விடையுரு மாறி யிங்ஙன்
மன்னிய தேயோ திங்கண் மண்டல மேயோ வென்னப்
பொன்னவிர் விமானக் கீழ்பால் வெள்ளியம் பொதுஹவண் டாக.

     (இ - ள்.) தன் அருளதனால் நீத்த தன்னையே தேடிப் போந்த -
தனது திருவருளால் தன்னை விடுத்து வந்த சிவபெருமானையே தேடி
வந்தமர்ந்த, மின் அவிர் கயிலை தானோ - ஒளி விளங்கும் திருக்கயிலை
மலைதானோ (அன்றி), விடை உருமாறி இங்ஙன் மன்னியதோ -
இடபவூர்தியானது தனது வடிவம் வேறாகி இம்மன்றமாய் நிலைபெற்றதோ
(அன்றி), திங்கள் மண்டலமோ என்ன - சந்திர மண்டலமோ என்று
கூறுமாறு, பொன் அவிர் விமானம் கீழ்பால் - பொன்னாலாகி விளங்கும்
விமானத்தின் கீழ் பக்கத்தில், வெள்ளியம் பொது உண்டாக -
வெள்ளியம்பலம் ஒன்று தோன்ற எ - று.

     தன் - சிவபெருமான். நீத்த - கயிலையை விடுத்து வந்த. தான் ஏ :
அசைகள். என்ன - என்று ஐயுற, என்று நினைக்க; என்று கூறு : (8)

மின்பயில் பரிதிப் புத்தேள் பாற்கடல் விளங்கி யாங்குப்
பின்பதன் மிசைமா ணிக்கப் பீடிகை தோன்றிற் றன்ன
தன்பர்த முளமே யாகு மல்லது வேதச் சென்னி
என்பதா மஃதே யன்றி யாதென விசைக்கற் பாற்றே.

     (இ - ள்.) பால் கடல் - திருப்பாற் கடலின்கண், மின் பயில்
பரிதிப்புத் தேள் விளங்கி யாங்கு - ஒளி தங்கிய சூரியதேவன்
தோன்றினாற்போல, பின்பு அதன் மிசை மாணிக்கப் பீடிகை தோன்றிற்று -
வெள்ளியம்பலம் தோன்றிய பின் அதன் மேல் மணிப் பீடம் ஒன்று
தோன்றியது; அன்னது அன்பர் தம் உளமே ஆகும் - அஃது அடியார்களின்
உள்ளத் தாமரையே ஆகும்; அல்லது வேதச் சென்னி என்பது ஆம் - அன்றி
மறை முடி என்று சொல்லப்படுவதாகும்; அன்றி - இங்ஙனம் கூறுவதல்லாமல்,
யாது என