I


46திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



போல் தலை எடுத்து, அந்நூல் உரை என - மேற் கூறிய நூலின் உரை
போல, விரிந்து - தலைவிரிந்து, கற்பின் மகளிர் போல் - கற்புடைமகளிர்
(தலை வணங்குதல்) போல், ஒசிந்தது - தலைவளைந்தது எ - று.

     அந்நூல் என்றது புரைறய வுணர்ந்தோ ரியற்றிய நூலினை. நூலின்,
கற்பின் என்பவற்றில் இன் சாரியை. பொருளின், இன் : ஒப்புப் பொருட்டு.
அன்று ஏ : அசை.

"சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் றோற்றம்போன்
மெல்லவே கருவிருந் மேலலார்
செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற்
கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே"

என்னுஞ் சிந்தாமணிச் செய்யுள் இங்கே நினைக்கற்பாலது. (24)

அன்புறு பத்தி வித்தி யார்வநீர் பாய்ச்சுந் தொண்டர்க்
கின்புரு வான வீச னின்னருள் விளையு மாபோல்
வன்புறு கருங்கான் மள்ளர் வைகலுஞ் செவ்வி நோக்கி
நன்புல முயன்று காக்க விளைந்தன நறுந்தண் சாலி.

     (இ - ள்.) அன்பு உறு - அன்பு மிக்க, பத்திவித்தி - பத்தியாகிய
வித்தை விதைத்து, ஆர்வம் நீர் பாய்ச்சும் தொண்டர்க்கு - விருப்பமாகிய
நீரைப் பாய்ச்சுகின்ற அடியார்களுக்கு, இன்பு உருவான ஈசன் - இன்பமே
வடிவாகிய இறைவனது, இன் அருள் விளையுமாபோல் - இனிய
திருவருளாகிய பயன் விளைகின்ற தன்மைபோல, வன்புஉறு - வைகலும்
மிக்க, கரும்கால் மள்ளர் - கரியகாலினையுடைய உழவர்கள், வைகலும் -
நாள்தோறும், செவ்வி நோக்கி - பருவம் பார்த்து, நன் புலம் - நல்ல
விளைபுலங்களை, முயன்று காக்க - முயற்சியோடு பாதுகாக்க, நறும்
தண்சாலி விளைந்தன - நறிய தண்ணிய நெற்பயிர்கள் விளைந்தன எ - று.

     அன்பின் முதிர்ச்சி பத்தி யெனப்படும். இக்கருத்தினை,

"அன்பென் பாத்தி கோலி முன்புற
மெய்யெனு மெருசை விரித்தாங் கையமில்
பத்தித் தனிவித் திட்டு நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சிநேர் நின்று"

என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கானறிக. ‘அருச்சனை வயலு ளன்புவித்
திட்டு’ என்பது திருவாசகம். விளையுமாறு என்பது குறைந்து நின்றது. (25)

அகனில வேறு பாட்டி னியல்செவ்வி யறிந்து மள்ளர்
தகவினை முயற்சி செய்யக் காமநூல் சாற்று நான்கு
வகைநலார் பண்பு செவ்வி யறிந்துசேர் மைந்தர்க் கின்பம்
மிகவிளை போகம் போன்று விளைந்தன பைங்கூ ழெல்லாம்.