மதுமுகத் தலர்ந்த வெண்டா மரைமகள் சுருதி கூட்டச்
சதுமுகத் தொருவன் சாம கீதயாழ் தடவிப் பாட
விதுமுகத் தருகு மொய்க்கு மீனென ஞான வெள்ளிப்
பொதுமுகத் தமரர் தூற்றும் பூமழை யெங்கும் போர்ப்ப. |
(இ
- ள்.) மதுமுகத்து அலர்ந்த வெள்தாமரை மகள் சுருதி கூட்ட -
தேன் ஒழுகும் முகத்தொடு மலர்ந்த வெள்ளிய தாமரை மலரில் வசிக்குங்
கலைமகள் சுருதி கூட்டவும், சதுமுகத்து ஒருவன் - நான்கு முகங்களையுடைய
பிரமன், யாழ் தடவி சாமகீதம் பாட - யாழினைத் தடவிச் சாமகீதம் பாடவும்,
விதுமுகத்து அருகு மொய்க்கும் மீன் என - திங்கள் மண்டிலத்தின் அருகிற்
சூழும் உடுக்களைப் போல, ஞான வெள்ளிப் பொதுமுகத்து - ஞானமயமாகிய
வெள்ளியம்பலத்தில், அமரர் தூற்றும் பூமழை எங்கும் போர்ப்ப - தேவர்கள்
பொழியும் மலர்மாரி எங்கும் மூடவும் எ - று.
கீதம்
என விரிக்க. தடவல் - நரம்பினை வருடல். விதுமுகத்து : பொது
முகத்து என்பவற்றில் முகம் ஏழனுருபு, (12)
பொருங்கூட னிறத்த செந்தீப் பொங்குளைக் குறளின் மீது
பெருங்கடல் வடவைச் செங்கண் பிதுங்கமேற் றிரிந்து நோக்கி
முருங்கட லெரியிற் சீற முதுகிற வலத்தா ளூன்றிக்
கருங்கடன் முளைத்த வெய்யோன் காட்சியிற் பொலிந்து நின்று. |
(இ
- ள்.) பொரும் கடம் நிறத்த - (அலை) மோது கடல் நிறம்
போலும் நிறத்தையுடைய, செந்தீ பொங்கு உளை குறளின் மீது - சிவந்த
தீப்போலும் விளங்கும் புறமயிரையுடைய முயலகன் மேல், பெரு கடல்
வடவை செங்கண் பிதுங்க - பெரிய கடலின் வடவைத் தீப்போல அவன்
சிவந்த கண்கள் பிதுங்கவும், மேல் திரிந்து நோக்கி - மேலே சுழன்று
பார்த்து, முருங்கு அடல் எரியில் சீற - (உலகினை) அழிக்கும்
வலியினையுடைய அவ்வடவைபோற் கோபிக்கவும், முதுகு இற - அவன்
முதுகு முறிய, வலத்தாள் ஊன்றி - வலது திருவடியை ஊன்றி, கருங்கடல்
முளைத்த வெய்யோன் காட்சியில் பொலிந்து நின்று - கரிய கடலின்கண்
தோன்றிய சூரியனது தோற்றம் போல விளங்கி நின்று எ - று.
நிறத்த
என்னும் குறிப்புப் பெயரெச்சம் குறளன் என்பதன் விகுதியைக்
கொண்டு முடியும். குறளன் - குறிய வடிவுடையவன்; முயலகன். மீது
ஊன்றியென்க. முருக்கு என்பது மெலிந்து நின்றது. (13)
கொய்யுஞ்செங் கமலப் போது குவிந்தென வெடுத்துக் கூத்துச்
செய்யும்புண் டரிகத் தாளுந் திசைகடந் துளவீ ரைந்து
கையுந்திண் படையுந் தெய்வ மகளிர்மங் கலநாண் காத்த
மையுண்ட மிடறுஞ் சங்க வார்குழை நுழைந்த காதும். |
(இ
- ள்.) கொய்யும் செங்கமலப் போது குவிந்தென - கொய்தற்குரிய
செந்தாமரை மலர் குவிந்தாற் போல, எடுத்து - தூக்கி கூத்துச் செய்யும்
|