புண்டரிகத் தாளும்
- திருக்கூத் தியற்றுகின்ற திருவடித் தாமரையும், திசை
கடந்துள ஈரைந்து கையும் - திக்குகளைக் கடந்த பத்துத் திருக்கைகளும்,
திண் படையும் - (அவற்றிலுள்ள) வலிய படைகளும், தெய்வ மகளிர் -
தெய்வப் பெண்களின், மங்கல நாண் காத்த - மங்கல நாணைக் காத்தருளிய,
மை உண்ட மிடறும் - கருநிறம் பொருந்திய திருமிடறும், வார் சங்கம் குழை
நுழைந்த காதும் - நீண்ட சங்க குண்டலம் பூண்ட திருச்செவியும் எ - று.
எடுத்து
- குஞ்சித்து. அயன்மால் உள்ளிட்ட தேவர்கள் பொன்றாமற்
காத்த வென்பார் 'தெய்வ மகளிர் மங்கல நாண் காத்த' என்றார்;
"செற்றால
முயிரனைத்து முண்டிடவே
நிமிர்ந்தெழலுஞ் சிந்தை மேற்கொள்
பற்றாலங் நுகர்ந்து நான்முகனே
முதலோர்தம் பாவைமார்க்குப்
பொற்றலி தனையளித்தோன்" |
என்னும்
கந்தபுராணச் செய்யுள் இங்கே நோக்கற்பாலது. காத்த மிடறென
மிடற்றின்மேலேற்றிக் கூறினார்; முன்பும் இங்ஙனம் வந்தமையோர்க. (14)
செக்கரஞ் சடையுந் தேசார் வெண்டிரு நீறுந் தெய்வ
முக்கணு முரகக் கச்சு முள்ளெயி றிமைக்கு மார்பும்
மைக்கருங் கயற் கணங்கை வல்லியி னொதுங்கி நிற்கும்
பக்கமு மவண்மேல் வைத்த பார்வையு நகையுந் தோன்ற. |
(இ
- ள்.) அம் செக்கர் சடையும் - அழகிய சிவந்த சடையும், தேசு
ஆர் வெள் திருநீறும் - ஒளி நிறைந்த வெள்ளிய திருநீறும், தெய்வ
முக்கணும் - தெய்வங்களாகிய மூன்று கண்களும், உரகக் கச்சும் - அரவக்
கச்சையும், முள்எயிறு இமைக்கும் மார்பும் - முள் போன்ற பன்றிக் கொம்பு
விளங்கும் திருமார்பும், மைக்கருங்கயல் கண் நங்கை - மை எழுதிய கரிய
கயல்போலுங் கண்களையுடைய உமையம்மையார், வல்லியின் ஒதுங்கி நிற்கும்
பக்கமும் - கொடி போன்று ஒதுங்கி நிற்கும் பக்கமும், அவள் மேல் வைத்த
பார்வையும் நகையும் - அவ்வம்மை மேல் வைத்த நோக்கமும் புன்னகையும்,
தோன்ற - தோன்றவும் எ - று.
செக்கர்
- செவ்வானம் போலும் என்றுமாம். ஆதித்தன் திங்கள் அங்கி
யென்னும் தெய்வங்கள் கண்களாதலின் 'தெய்வமுக்கணும்' என்றார். இவ்விரு
செய்யுளிலும் எண்ணி வந்த தாள் முதலியவற்றைத் தோன்ற என்பதனோடு
முடிக்க. (15)
கங்கையா றலம்பு மோசை கடுக்கைவண் டிரங்கு மோசை
மங்கல முழவி னோசை மந்திர வேத வோசை
செங்கையா டெரியி னோசை திருவடிச் சிலம்பி னோசை
எங்கணு நிரம்பி யன்ப ரிருசெவிக் கமுத மூற்ற. |
(இ
- ள்.) கங்கை ஆறு அலம்பும் ஓசை - கங்கையாறு ஒலிக்கும்
ஒலியும், கடுக்கை வண்டு இரங்கும் ஓசை - கொன்றை மாலையிலுள்ள
|