I


வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்465



     பரம் - முன்; அபரம் - பின்; பராபரன் - முன்னும் பின்னுமானவன்;

"முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே"

என்பது திருவாசகம். பத்தியாகிய வித்தின் விளைவானவனென்க;

"அருச்சனை வயலு ளன்பு வித்திட்டு"

என மணிவாசகப் பெருமானும்,

"பத்தித்தனி வித்திட்டு"

எனப் பட்டினத்துப் பிள்ளையாரும் அருளிச் செய்தமை காண்க;
இவ்வாசிரியரும்
"அன்புறு பத்தி வித்தி" என முற்கூறினார். தற்பரம் -
யாவற்றையும் கடந்து நிற்கும் சிவம்; "தற்பரமு மல்லை தனி" எனச் சிவஞான
போத
த்துள் வருந் தொடர்க்குச் சிவஞான முனிவர் கூறிய பொருளை
நோக்குக. கராசலம் - கைம்மலை; யானை. நிராமயம் - நோயின்மை.

ஒன்றாகி யைந்தா யையைந் துருவாகி வருவாய் போற்றி
இன்றாகிச் சென்ற நாளா யெதிர்நாளா யெழுவாய் போற்றி
நன்றாகித் தீய தாகி நடுவாகி முடிவாய் மன்றுள்
நின்றாடும் பரமா னந்த நிருத்தனே போற்றி போற்றி.

     (இ - ள்.) ஒன்று ஆகி ஐந்து ஆய் ஐயைந்து உருவாகி -
ஓருருவாகியும் ஐந்து உருவாகியும் இருபத்தைந்து உருவாகியும், வருவாய்
போற்றி - (உயிர்களின் பொருட்டு) வந்தருளுபவனே வணக்கம்; இன்றாகி
சென்ற நாளாய் எதிர் நாளாய் எழுவாய் போற்றி - நிகழ் காலமாகியும்
இறந்த காலமாகியும் எதிர் காலமாகியும் தோன்றுபவனே வணக்கம்; நன்றாகி
தீயதாகி - நன்மையாகியும் தீமையாகியும், நடுவாகி முடிவாய் - நடுவாகியும்
முடிவாகியும், மன்றுள் நின்று ஆடும் பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி
- அம்பலத்தில் நின்று ஆடியருளும் பேரின்ப மயமாகிய திருக்கூத்தினை
உடையவளே வணக்கம் வணக்கம் எ - று.

     ஒன்று - சுத்த சிவம். ஐந்து - நிட்களமும், சகள நிட்களமும்,
சகளமுமாகிய சிவன், நாத சிவன், சதாசிவன், மகேசன், உருத்திரன் என்னும்
ஐந்தும். ஐயைந்து - சந்திர சேகரர், உமாமகேசர், இடபாரூடர், சபாபதி,
கலியாண சுந்தரர், பிச்சாடனர், காமாரி, அந்தகாரி, திரிபுராரி, சலந்தராரி,
விதித்துவம்சர், வீரபத்திரர் நரசிங்க நிபாதனர், அர்த்தநாரீசர், விக்கிராதரர்,
கங்காளர், சண்டே சானுக்கிரகர், நீலகண்டர், சக்கராபயப்பிரதர்,
கசமுகானுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், அனந்த சுகவிருது,
தக்கிணாமூர்த்தி, இலிங்கோற்பவர் என்னும் இருபத்தைந்து மூர்த்தமுமாம்.
உயிர்களின் பிராரத்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்னும் வினைகளின்
பயன்களை நுகர்வித்தலின் 'இன்றாகிச் சென்ற நாளா யெதிர் நாளாய்'
என்றார்; இருவினைப் பயன்களாகிய துறக்க நிரய இன்ப துன்பங்களை
நுகர்வித்தலின் 'நன்றாகித் தீயதாகி' என்றார்; நின்ற திருத்தாண்டகத்துள்,