எந்தையித் திருக்கூத் தென்று மிந்நிலை நின்றியா வர்க்கும்*
பந்தவெம் பாச நீங்கப் பரிந்தருள்+ செய்தி யென்னச்
செந்தமிழ்க் கன்னி நாடு செய்தமா தவப்பே றெய்தத்
தந்தன மென்றான் வேதந் தலைதடு மாற நின்றான். |
(இ
- ள்.) எந்தை - எம் தந்தையே, இத் திருக்கூத்து - இந்தத்
திருக்கூத்துடன், என்றும் இந்நிலை நின்று - எப்பொழுதும் இவ்
வெள்ளியம்பலத்துளே நின்று, யாவர்க்கும் பந்த வெம் பாசம் நீங்க -
யாவருக்கும் பந்தமாகிய வெய்ய பாசம் நீங்குமாறு, பரிந்து அருள் செய்தி
என்ன - இரங்கி அருள் செய்வாயென்று வேண்ட, வேதம் தலை தடுமாற
நின்றான் - மறைகள் (தன்னைத் துருவித்) தட்டழிய நின்ற இறைவன்,
செந்தமிழ்க் கன்னி நாடு செய்த - செந்தமிழுக்கு நிலைக்களமாகிய கன்னி
நாடு செய்த, மாதவப் பேறு எய்த - பெரிய தவப்பயன் அதற்குப் பொருந்த,
தந்தனம் என்றான் - அங்ஙனமே அளித்தோம் என்று அருள் புரிந்தான்
எ - று.
வெம்
பாசபந்தமென மாறுக; பாச பந்தம் - பாசத் தொடக்கு. செந்தமிழ்
நாடாகிய கன்னி நாடு என விரித்தலுமாம். (24)
அராமுனி யீது வேண்டு மாதியெம் பெரும விந்த
நிராமய பரமா னந்த நிருத்தநேர் கண்டோ ரெல்லாந்
தராதல மிசைவந் தெய்தாத் தனிக்கதி பெறுதல் வேண்டும்
பராபர வென்று தாழ்ந்தான் பகவனு மதற்கு நேர்ந்தான். |
(இ
- ள்.) அராமுனி ஈது வேண்டும் - பதஞ்சலி முனிவன் இதனை
வேண்டுவான்; ஆதி எம்பெரும - ஆதியாகிய எம்பெருமானே, பராபர -
பரமும் அபரமுமானவனே, இந்த நிராமய பரமானந்த நிருத்தம் நேர்
கண்டோர் எல்லாம் - நிராமயமாயும் பரமானந்தமாயும் உள்ள
இத்திருக்கூத்தை நேரே தரிசித்தவரனைவரும், தராதலம் மிசை வந்து எய்தாத்
தனிக்கதி பெறுதல் வேண்டும் - பூமியில் மீண்டு வந்து பிறவாத ஒப்பற்ற
சிவகதியை அடைதல் வேண்டும், என்று தாழ்ந்தான் - என்று கூறி
வணங்கினான்; பகவனும் அதற்கு நேர்ந்தான் - இறைவனும் அதற்கு
உடன்பட்டான் எ - று.
ஈது
- பின்வருவது. ஈது வேண்டும் என்பதனை எச்சப்படுத்து முடிக்க.
பிறவி நோயையொழிக்கும் திருக்கூத்தை நோயில்லதெனக் கூறினார்.
தராதலம் - தரையாகிய தலம். (25)
ஆர்த்தனர்
கணத்தோர் கைகோத் தாடின ரலர்பூ மாரி
தூர்த்தனர் விண்ணோர் கண்ணீர் துளும்பினர் முனிவ ராகம்
போர்த்தனர் புளக மன்பிற் புதைந்தனர் விழுங்கு வார்போற்
பார்த்தனர் புல்லிக் கொண்டார் பரவியவ் விருவர் தம்மை. |
(இ
- ள்.) கணத்தோர் ஆர்த்தனர் கை கோத்து ஆடினர் - சிவ
கணத்தவர் ஆரவாரித்துக் கைகளைக் கோத்துக் குரவையாடினர்; விண்ணோர்
(பா
- ம்.) * நின்றியார்க்கும். +பரித்தருள்
|