அலர் பூமாரி தூர்த்தனர்
- தேவர்கள் மலர்ந்த மலர் மழையைப்
பொழிந்தனர்; முனிவர் - முனிவர்கள், கண் நீர் துளும்பினர் - கண்ணீர்
ததும்பி, ஆகம் புளகம் போர்த்தனர் - உடல் புளகம் போர்த்து, அன்பில்
புதைந்தனர் - அன்பினால் மூடப்பட்டு, அவ்விருவர் தம்மைப் பரவி - அந்த
இரண்டு முனிவரையும் துதித்து, விழுங்குவார் போல் பார்த்தனர் - கண்களால்
விழுங்குகின்றவரைப் போலப் பார்த்து, புல்லிக் கொண்டார் - தழுவிக்
கொண்டனர் எ - று.
ஆர்த்தனர்
என்னும் முற்றும் துளும்பினர் என்பது முதலிய நான்கு
முற்றுக்களும் எச்சமாயின. விருப்பத்துடன் இமையாது நோக்குதலை
விழுங்குதல்போற் பார்த்தல் என்பர்;
"பருகுவன்ன வருகா
நோக்கமொடு" |
என்பது பொருநராற்றுப்படை.
(26)
[- வேறு]
|
அனித்த மாகிய
பூதமைம்
பொறிபுல னனதியா றாறாகி
இனித்த மாயையோ டிருவினைத்
தொடக்கினு மிருளினும் வேறாகித்
தனித்த யோகிக ளகநிறைந்
தாடிய தனிப்பெருந் திருக்கூத்தைக்
குனித்த வண்ணமாக் கண்டவர்க்
கிகபரங் கொடுத்தவ ணுறைகின்றான்.* |
(இ
- ள்.) அனித்தம் ஆகிய பூதம் ஐம்பொறி புலன் ஆதி ஆறாறாகி
- நிலையுடைய வல்லவாகிய பூதமைந்தும் பொறியைந்தும் புலனைந்தும்
முதலிய முப்பத்தாறு தத்துவங்களாய், இனித்த மாயையோடு (உயிர்களுக்குச்)
சுவையைக் கொடுக்கும் மாயையோடு, இருவினைத் தொடக்கினும் இருளினும்
வேறாகித் தனித்த - இருவினைக் கட்டினின்றும் ஆணவத்தினின்றும்
வேறாகித் தனித்து நிற்கும், யோகிகள் அகம் நிறைந்து - யோகிகளின்
உள்ளத்தில் நிறைந்து, ஆடிய தனிப்பெரும் திருக்கூத்தை - ஆடியருளும்
ஒப்பற்ற பெரிய திருக்கூத்தினை, குனித்த வண்ணமாக் கண்டவர்க்கு -
ஆடிய கோலமாகப் புறத்தில் தரிசித்தவருக்கு, இகபரம் கொடுத்து அவண்
உறைகின்றான் - இம்மை மறுமைப் பயன்களைக் கொடுத்து
அவ்வெள்ளியம்பலத்துள் எழுந்தருளியிருக்கின்றான் எ - று.
புலன்
என்றது ஈண்டுத் தன்மாத்திரையை. முப்பத்தாறு
தத்துவங்களாவன :- நிலம், நீர், தீ, வளி, வான் என்னும் பூதங்கள் ஐந்தும்;
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும்; வாக்கு,
பாதம், பாணி, பாயுரு, உபத்தம் என்னும் கன்மேந்திரியங்கள் ஐந்தும்; நாற்றம்,
சுவை, ஒளி, ஊறு, ஓசை, என்னும் தன்மாத்திரைகள் ஐந்தும்; மனம்,
(பா
- ம்.) * உறைகின்றாம்.
|