(இ
- ள்.) அகல்நில வேறுபாட்டின் இயல் - அகன்ற நிலங்களின்
வேறுபாட்டின் தன்மையையும், செவ்வி - (பயிரிடும்) பருவத்தையும், அறிந்து
- தெரிந்து, மள்ளர் - உழவர்கள், தகவினை முயற்சி செய்ய - (அவற்றிற்கு)
தகுதியாகத் தொழில் முயற்சி செய்ய, காம நூல் சாற்றும் நான்குவகை நலார்
- காமநூல் கூறுகின்ற நால்வகைப் பட்ட மகளிரின், பண்பு செவ்வி அறிந்து
- தன்மையையும் பருவத்தையும் தெரிந்து, சேர் மைந்தர்க்கு - கலவிசெய்யும்
ஆடவருக்கு, இன்பம் மிகவிளை - இன்பம் மிக விளைகின்ற, போகம்
போன்று - அவ்வநுபவம் போல, பைங்கூழ் எல்லாம் விளைந்தன - பயிர்கள்
அனைத்தும் விளைந்தன எ - று.
நில
வேறுபாடு - செவ்வல், கரிசல் முதலாயின. நான்குவகை நல்லார்
- பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்போர். மகளிரிடத்துப் போகம்
விளைதல் போன்று நிலத்தின்கட் பயிர்விளையு மென்னுங் கருத்தினை,
"செல்லான் கிழவ
னிருப்பி னிலம்புலந்
தில்லாளி னூடி விடும்" |
என்னும் பொதுமறையா
னறிக. இயல் செவ்வி, பண்பு செவ்வி என் பவற்றில்
எண்ணும்மைகள் விகாரத்தாற் றொக்கன. (26)
கொடும்பிறை வடிவிற் செய்த கூனிரும் பங்கை வாங்கி
முடங்குகால் வரிவண் டார்ப்ப முள்ளரைக் கமல நீலம்
அடங்கவெண் சாலி செந்நெல் வேறுவெ றிரிந்தீ டாக்கி
நெடுங்களத் தம்பொற் குன்ற நிரையெனப் பெரும்போர் செய்தார். |
(இ
- ள்.) கொடும்பிறை வடிவில் செய்த - வளைந்த பிறையுன்
வடிவுபோற் செய்யப்பெற்ற, கூன் இரும்பி அங்கை வாங்கி - அரிவாளைக்
கையிலேந்தி, முடங்கு கால் வரிவண்டு ஆர்ப்ப - வளைந்த கால் களையும்
கீற்றுக்களையுமுடைய வண்டுகள் ஒலிக்க, முள் அரைக் கமலம் நீலம் -
முள்ளோடு கூடிய நாளத்தினையுடைய தாமரையும் குவளையும், அடங்க -
உடன்சேர, வெண்சாலி செந்நெல் - வெண்ணெல் செந் நெல் விளைவுகளை,
வேறு வேறு அரிந்து - வெவ்வேறாக அறுத்து, ஈடு ஆக்கி -
கற்றைகளாக்கி, நெடும் களத்து - நெடிய களத்தின்கண், அம்பொன் குன்றம்
நிரை என - அழகிய பொன் மலைகளின் வரிசைகள்போல, பெரும்போர்
செய்தார் - (உழவர்கள்) பெரிய போர்கள் செய்தனா எ - று.
பிறை
வடிவென முன்வந்தமையின் கூனிரும்பு என்பது பெயர்
மாத்திரையாய் நின்றது. அங்கை - அகங்கை. கமலநீலம் உம்மைத் தொகை.
வெண்சாலி செந்நெல் என்புழிச் செவ்வெண்ணின் றொகை விகாரத்தாற்
றொக்கது. ஈடு - பெருமை; ஆண்டுக் கற்றை; ஈடுசால் போராழித்து
என்னும் சிந்தாமணிச் செய்யுளுரையை நோக்குக.
(27)
கற்றவை களைந்து
தூற்றிக் கூப்பியூர்க் காணித் தெய்வம்
அற்றவர்க் கற்ற வாறீந் தளவைகண்* டாறி லொன்று
கொற்றவர் கடமை கொள்ளப் பண்டியிற் கொடுபோய்த் தென்னா
டுற்றவர் சுற்றந் தெய்வம் விருந்தினர்க் கூட்டி யுண்பார். |
(பா
- ம்.) * அளவை கொண்டு.
|