மின்னியல்
- மின்னின் தன்மை. எந்நிலத்தும் என உம்மை விரித்து,
ஏனோரென்பதனை மன்னவரென்பதன் பின்னே கூட்டுக. உண்டற்குச்
சிறந்தது பொற்கலமென்பதனை,
"பொற்கலத்துப்
பெய்த புலியுகிர் வான்புழுக்கல்"
"பொற்கலத் தூட்டிப் புறந்தரினும்" |
என்பவற்றாலறிக. அருத்தா
: செய்யா என்னும் உடன்பாட்டெச்சம். (2)
பூசு கின்றவு முடுப்பவும் பூண்பவும் பழுக்காய்
வாச மெல்லிலை யேனவு மம்முறை வழங்காத்
தேச மன்னவ ரேனையோர்ச் செல்லுநர்ச்* செலுத்தி
ஈச னன்புறு கற்பினா ளிருக்குமவ் வேலை. |
(இ
- ள்.) பூசுகின்றவும் - பூசப்படும் சாந்த முதலியவைகளையும்,
உடுப்பவும் - உடுக்கப்படும் பொன்னாடை முதலியவைகளையும், பூண்பவும்
- பூணப்படும் இரத்தினாபரணம் முதலிய அணிகலன்களையும், பழுக்காய்
வாசம் மெல்லிலை ஏனவும் - பாக்கும் வாசமும் வெற்றிலையும் பிறவும்
ஆகியவற்றையும், அம் முறை வழங்கா - அந்த முறையே கொடுத்து, தேச
மன்னவர் ஏனையோர் - பல நாட்டு மன்னர்களுள்ளும் பிறருள்ளும்,
செல்லுநர் செலுத்தி - போகும் குறிப்பினரைப் போக்கி, ஈசன் அன்பு உறு
கற்பினாள் இருக்கும் அவ்வேலை - சோமசுந்தரக் கடவுளாகிய வேந்தனால்
அன்பு செய்யப்பட்ட கற்பினையுடைய தடாதகைப் பிராட்டியார் இருக்கும்
அப்பொழுதில் எ - று.
வாசம்
- பஞ்சவாசம்; அவற்றை,
"தக்கோலம்
தீம்பூத் தகைசால் இலவங்கம்
கர்ப்பூரம் சாதியோ டைந்து" |
என்பதனாலறிக. மெல்லிலைக்கு
முன் உரைத்தமை காண்க. (3)
மடைவளத் தொழிற் புலவர்வந் தடியிணை வணங்கி
அடிய ரேமட்ட போனக மாயிரத் தொன்றின்
இடைய தாயினுந் தொலைந்தில தியாங்கண்மேற் செய்யக்
கடவ தேதெனப் பிராட்டிதன் கணவர்முன் குறுகா. |
(இ
- ள்.) மடைவளத் தொழில் புலவர் - சமைத்தலாகிய வளப்ப
மிக்க தொழிலில் வல்ல புலவர்கள், வந்து அடியிணை வணங்கி - வந்து
திருவடிகளை வணங்கி, அடியரேம் அட்ட போனகம் - அடியேங்கள்
சமைத்த அடிசிலில், ஆயிரத்து ஒன்றின் இடையது ஆயினும் - ஆயிரத்தில்
ஒரு கூறு அளவுடையதாயினும், தொலைந்திலது - அழியவில்லை; யாங்கள் -
அடியேம், மேற்செய்யக் கடவது ஏது என - மேலே செய்யத் தகுவது
யாதென்று வினவ, பிராட்டி தன் கணவர் முன் குறுகா - பிராட்டியார் தம்
நாயகராகிய சவுந்திர பாண்டியர் திருமுன் சென்று எ - று.
(பா
- ம்.) * ஏனையோர் செல்லுநர்.
|