மடை
- சோறு. ஒன்றினிடையது - ஒன்றினிடைப்பட்டது; அவ்வளவிற்று
என்றபடி. (4)
பணிந்தொ
துங்கிநின் றடிகண்முப் பத்துமுக் கோடி
கணங்க டம்மொடு மிங்கெழுந் தருள்வது கருதி
இணங்கு மின்சுவைப் போனக மெல்லையின் றாக்கி
உணங்கு கின்றதுண் டெஞ்சிய தெனைத்தென வுரைக்கின். |
(இ
- ள்.) பணிந்து ஒதுங்கி நின்று - வணங்கி ஒரு சிறை ஒதுங்கி
நின்று, அடிகள் - தேவரீர், முப்பத்து முக்கோடி கணங்கள் தம்மொடும் -
முப்பத்து முக்கோடி தேவகணங்களோடும், இங்கு எழுந்தருள்வது கருதி -
இங்கு எழுந்தருளுவதைக் குறித்து, இன்சுவை இணங்கு போனகம் எல்லை
இன்று ஆக்கி - இனிய சுவை பொருந்திய அமுது அளவின்றிச் சமைத்து,
உணங்குகின்றது - வறிதே உணங்கா நின்றது; உண்டு எஞ்சியது எனைத்தென
உரைக்கின் - உண்டு மிகுந்தது எவ்வளவிற்றென்று கூறப்புகின் எ - று.
இன்றியென்னும்
வினையெச்சத் திகரம் உகரமாயிற்று. ஆக்கி -
அடப்பட்டு. உண்ண எஞ்சியது என்பது உண்டெஞ்சியதெனத் திரிந்தது. (5)
இமையக் குன்றமு மடைகலா யிதன்புறங் கிடந்த
சிமையக் குன்றுக ளீட்டமுஞ் சேர்ந்தென நிமிரச்
சமையக் கொட்டிய வாலரிப் புழுக்கலுஞ் சாதக்
கமையக் கொட்டிய கறிகளின் வருக்கமு மாகும்.* |
(இ
- ள்.) இமையக் குன்றமும் - இமய மலையும், இதன் புறம்
அடைகலாய் கிடந்த - இதன் புறத்தே அடுக்கமாய்க் கிடந்த, சிமையக்
குன்றுகள் ஈட்டமும் சேர்ந்தென - உச்சியையுடைய மலைக் கூட்டமும்
சேர்ந்தாற்போல, நிமிரச் சமையக் கொட்டிய வால் அரிப் புழுக்கலும் -
வானையளாவப் பொருந்தச் சமைத்துக் கொட்டிய வெள்ளிய அரிசியாலமைந்த
சோறும், சாதக்கு அமையக் கொட்டிய கறிகளின் வருக்கமும் ஆகும் - அப்
புழுக்கலுக்குப் பொருந்தக் கொட்டிய கறிகளின் வகைகளும் ஆகும் எ - று.
அடைகல்
- பக்கமலை; அடுக்கமென்னும் பெயரானுமறிக; தாங்குங்
கல்லுமாம். சேர்ந்தென ஆகும் என்க. அரி - அரிசி; சாதக்கு : அத்துச்
சாரியை தொக்கது. (6)
என்ற போதிறை
யெம்பிரான் றேவியா ரிடத்தில்
ஓன்று மன்பினா லொருவிளை யாடலை நினைத்தோ
தன்ற னிக்குடைப் பாரிடத் தலைவன தாற்றல்
அன்றி யாவரு மறிந்திடக் காட்டவோ வறியேம். |
(பா
- ம்.) * வருக்கமுமனையை; வருக்கமு மனைத்தே.
|