அறியுமாறு இங்ஙனம்
செய்தனை போலும்; நின் விருந்து உண் - நினது
விருந்தை உண்ணுதற்கு, பசியால் களை அடைந்தவராகி - பசியால்
களைப்புற்றவராகியிருப்பாரை, நம் கணத்தினுள் காணேம் - நம்
கணங்களுள்ளே கண்டிலேம்; யாம் செயத்தக்கது ஏது என்றான் - எம்மாற்
செய்யத்தக்கது யாது என்று கூறியருளினான் எ - று.
நின்
விருந்து - நீ அளிக்கும் விருந்து; விருந்தினர்க்களிக்கும்
உணவுக்கு விருந்தென்பது ஒரு பெயராயிற்று. இருப்பாரையென ஒரு சொல்
வருவிக்கப்பட்டது. (9)
அடுக்க நின்றகுண் டோதர னகட்டிடை வடவை
மடுக்க வுன்னினா னதுவந்து வயிற்றெரி பசியாய்த்
தொடுக்க வாலமுண் டாங்குடல் சோர்ந்து*வேர்த் தாவி
ஒடுக்க முற்றைய பசியினா லுயங்கினே னென்றான். |
(இ
- ள்.) (அங்ஙனங்கூறி) அடுக்க நின்ற குண்டோதரன் அகட்டிடை
- அயலில் நின்ற குண்டோதரன் வயிற்றினிடத்து, வடவை மடுக்க
உன்னினான் - வடவைத்தீப் புகுமாறு திருவுள்ளங் கொண்டான்; அது வந்து
வயிற்று எரி பசியாய்த் தொடுக்க - அத் தீ வந்து வயிற்றின் கண் காந்துகின்ற
பசியாய்த் தொடர, ஆலம் உண்டாங்கு - நஞ்சுண்டவன் போல, உடல்
சோர்ந்து ஆவி ஒடுக்க முற்று - உடல் தளர்ந்து உயிர் ஒடுங்கி, ஐய -
பெருமானே, பசியினால் உயங்கினேன் என்றான். பசியினால் வாடினேன்
என்று கூறினான் எ - று.
அடுக்க
- அணுக. தொடுக்க - வளைத்துக் கொள்ள. மதுரை
ஞானசம்பந்தப் பிள்ளை பதிப்பில் இச் செய்யுள் மிக்க பேதத்துடன்
காணப்படுகின்றது. (10)
குடையெ டுக்குமிக் குறியதாட் குறட்கொரு பிடிசோ
றிடுமி னப்புறஞ் சோறுமா லெனத்தொழு தெல்லாம்
உடைய நாயகி போயினாள் குறியனு முடனே
நடைத ளர்ந்துகண் புதைந்துவாய் புலர்ந்திட நடந்தான். |
(இ
- ள்.) மின் - மின் போன்ற பெண்ணே, குடை எடுக்கும் குறிய
தாள் இக் குறட்கு - எனது குடையைத் தாங்கி வரும் சிறிய காலையுடைய
இப்பூதத்திற்கு, ஒரு பிடி சோறு இடு - ஒரு பிடி சோறு கொடுப்பாயாக,
அப்புறம் சோறும் என - பின்னர்க் கூறுவேம் என்று கூறியருள, எல்லாம்
உடைய நாயகி தொழுது போயினாள் - எல்லாவற்றையும் உடைய பிராட்டியார் வணங்கி போயினார்;
குறியனும் உடனே - குண்டோதரனும் பின்னாகவே,
நடை தளர்ந்து கண் புதைந்து வாய்புலர்ந்திட நடந்தான் - நடை சோர்ந்து
கண் குழிந்து வாய் புலர நடந்தான் எ - று.
குறள்
- குறிய பூதம். இடுமின் என மதுரையிலுள்ளார் பிறரையும்
உளப்படுத்திக் கூறிற்றுமாம். அப்புறம் - இட்டபின். சோறும் : தன்மைப்
(பா
- ம்.) * அகட்டிடை யழலை யிடுக்கண் செய்திடு வட வைபோ
லெரிவுற நினைத்தான் துடைக்கு மால முண்டாங்குடன் சோர்ந்து.
|