I


478திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



குறிஞ்சிப்பாட்டடிக்கு நச்சினார்க்கினியர் கூறியவுரைனறிக; சில - வட்டத்
தகட்டணியென்பர் சிலர்; அது சிறப்பின்றென்க. அறிகலான் - கு : சாரியை,
அல் : எதிர்மறை யிடை நிலை. குடவயிறு - குடம் போலும் ஆழமாகிய
வயிறு. (18)

ஐய வின்னுமிக் குறட்பசி யடங்கிடா வேறு
வெய்ய பாரிட வீரரை விடுத்தியே லெடுத்து
வையம் யாவையும் வயிற்றிடை வைப்பரே யிதனாற்
செய்ய காலருத் திரப்பெயர் தேற்றமா முனக்கே.

     (இ - ள்.) ஐய - ஐயனே, இக்குறள் பசி இன்னும் அடங்கிடா -
இக்குறிய பூதத்தின் பசிதானும் இன்னமும் அடங்கவில்லை; வேறு வெய்ய
பாரிட வீரரை விடுத்தியேல் - வேறு கொடிய பூதகண வீரரை
விடுப்பாயானால் (அவர்), வையம் யாவையும் எடுத்து வயிற்றிடை வைப்பர் -
உலகம் அனைத்தையும் எடுத்து வயிற்றின்கண் வைத்து விடுவர்; இதனால் -
இந்நிகழ்ச்சியினால், உனக்குச் செய்ய கால ருத்திரப் பெயர் தேற்றம் ஆம் -
உனக்குச் செந்நிறமுடைய கால உருத்திரனென்னும் பெயர் உறுதியாம் எ-று.

     குறள், சொல்லால் அஃறிணையாகலின் ஈறு திரிந்தது. அடங்கிடா :
துவ்வீறு தொக்கது. ஏ : தேற்றம். (19)

சங்க வார்குழைக் குறண்மகன் றன்செய றானே
இங்கு வந்துரை செய்திட வறிதியென் றிறைமுன்
மங்கை நாயகி குமுதவாய் மலர்பொழு தெயிற்றுத்
திங்கள் வாய்முழை யான்பசித் தீச்சுட வந்தான்.

     (இ - ள்.) சங்க வார் குழைக் குறள் மகன் - சங்காலாகிய நீண்ட
குண்டலத்தையுடைய குண்டோதரன், தன் செயல்தானே இங்கு வந்து உரை
செய்திட அறிதி என்று - தன் செயலைத் தானே இங்கே வந்து கூற
அறிவாய் என்று, இறை முன் - இறைவன் முன், மங்கை நாயகி - மங்கையர்க்
கரசியாகிய பிராட்டியார், குமுத வாய் மலர் பொழுது - சேதாம்பல் போன்ற
திருவாய் மலர்ந்து கூறும்பொழுது, எயிற்றுத் திங்கள் வாய் முழையான் -
கோணற் பல்லாகிய அரைமதியையும் வாயாகிய குகையினையுமுடைய
குண்டோதரன், பசித் தீச் சுட வந்தான் - பசித்தழல் கொளுத்த வந்தான்
எ - று.

     குறள் மகன் - குறளாகிய மகன்; ஈண்டு மகன் என்றது பாலுணர்த்து
மாத்திரையாய் நின்றது. வாய் மலர்தலாகிய காரணம் கூறுதலாகிய காரியத்தை
உணர்த்தும். (20)

நட்ட மாடிய சுந்தர நங்கையெம் பிராட்டி
அட்ட போனகம் பனிவரை யனையவாய்க் கிடந்த
தொட்டு வாய்மடுத் திடவுமென் சுடுபசி தணியா
திட்ணோதவர் வயிறுபோற் காந்துவ தென்றான்.