I


அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம்483



அனைய னாகியு யாற்றலன் வருந்தும்
வினைய னாகிவா னதிச்சடை வேதியன் பாதத்
தினைய நாதனுந் தன்றிரு முடியின்மீ திருக்கும்
நனைய நாண்மல ரோதியைப்* பார்த்தொன்று நவில்வான்.

     (இ - ள்.) அனையன் ஆகியும் - அங்ஙனம் குடித்தலையுடை
யனாகியும், நீர் நசை ஆற்றலன் வருந்தும் வினையனாகி - நீர் வேட்கையைப்
பொறாதவனாகி வருந்துந் தன்மையுடையவனாய், வான் நதிச் சடை வேதியன்
பாதத்து இனைய - சிறந்த கங்கையாற்றினையுடைய சடையையுடைய
அந்தணனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவடிகளில் வீழ்ந்து வருந்த,
நாதனும் - அவ்விறைவனும், தன் திருமுடியின் மீது இருக்கும் - தனது
திருமுடியின்கண் இருக்கின்ற, நனைய நாள் மலர் ஓதியைப் பார்த்து ஒன்று
நவில்வான் - தேனையுடைய புதிய மலரையணிந்த கூந்தலையுடைய
கங்கையை நோக்கி ஒன்று கூறுவான் எ - று.

     ஆற்றலன் : எச்சமாயிற்று. வினை - ஈண்டுத் தன்மை. பாதத்தில்
விழுந்து என விரிக்க. நனைய : குறிப்புப் பெயரெச்சம். நீர் வேட்கையைத்
தணிக்கவல்லவனென்பது தோன்ற 'வானதிச்சடை வேதியன்' என
அபிப்பிராயத்தோடு கூடிய விசேடணந் தந்தமையின் கருத்துடை யடையணி. (8)

தேங்கு நீர்த்திரை மாலிகைச் செல்விநீ யிந்த
வாங்கு நீர்த்தடம் புரிசைசூழ் மதுரையின் மாடோர்
ஓங்கு நீத்தமா யொல்லென வருதியென் றுரைத்தான்
நீங்கு நீர்த்திரு மாதவ ணொருமொழி நிகழ்த்தும்.

     (இ - ள்.) தேங்கும் நீர் திரை மாலிகைச் செல்வி - ததும்புகின்ற
நீரினையும் அலை மாலையினையுமுடைய நங்காய், நீ இந்த வாங்கு
நீர்த்தடம்புரிசை சூழ் மதுரையின் மாடு - நீ இந்த வளைந்த அகழியும் பெரிய
மதிலும் சூழ்ந்த மதுரைப் பதியின் அருகில், ஓர் ஓங்கு நீத்தமாய் ஒல்லென
வருதி என்று உரைத்தான் - ஒரு பெரிய வெள்ளமாக விரைந்து வருவாய்
என்று கட்டளையிட்டருளினான்; நீங்கு நீர்த் திருமாது - உடன்
சடையினின்றும் நீங்கா நின்ற தெய்வத் தன்மையையுடைய கங்கா தேவி,
அவண் ஒரு மொழி நிகழ்த்தும் - அங்கு ஒரு வார்த்தை கூறுவாள் எ - று.

     வாங்கு நீர் - வளைந்த தன்மையெனலுமாம். (9)

அன்று மெம்பிரா னாணையாற் பகீரதன் பொருட்டுச்
சென்று நீயொரு தீர்த்தமாய்த் திளைப்பவர் களங்கம்
ஒன்று தீவினைத் தொடக்கறுத் தொழுகெனப் பணித்தாய்
இன்று மோர்நதி யாகெனப் பணித்தியே லென்னை.

     (இ - ள்.) எம்பிரான் - எம் பெருமான், அன்றும் - அக்காலத்தும்,
ஆணையால் - நம் கட்டளையால், நீ பகீரதன் பொருட்டு சென்று - நீ     


 (பா - ம்.) * நனைய வார்குழ லோதியை.