I


484திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



பகீரதன் நிமித்தமாகப் போய், ஒரு தீர்த்தம் ஆய் - ஒரு தீர்த்தமாகி,
திளைப்பவர் - முழுகுவோரின், களங்கம் ஒன்று தீவினைத் தொடக்கு -
குற்றம் பொருந்திய பாவத் தொடக்கினை, அறுத்து ஒழுகு என - போக்கி
நடப்பாய் என்று, பணித்தாய் - பணித்தருளினாய்; இன்றும் என்னை -
இப்பொழுதும் என்னை, ஓர் நதி ஆகு என - ஒரு நதியாவாய் என்று,
பணித்தியேல் - கட்டளையிடுவாயாயின் எ - று.

     எம்பிரானாகிய நீ 'நம் ஆணையாற் சென்று அறுத்து ஒழுகு' எனப்
பணித்தாய் என்க. எம்பிரான் : வினையுமாம். 'பகீரதன் பொருட்டுச் சென்று'
என்றமையால் அதற்கு முன்னும் கங்கை சிவபிரான் திருமுடிமேல்
தரிக்கப்பட்டிருந்ததென்பது போதரும்; உமா தேவியாரின் திருக்கை
விரல்களிற் றோன்றிய கங்கையைச் சிவ பெருமான் தமது திருச்சடையிற்
றரித்தருளி, தம்மையடைந்து வேண்டிய திருமால் பிரமன் இந்திரன்
என்பவர்கட்கு அதனிற் சிறிதுதவ, அவர்கள் அதனைத் தத்தம் உலகிற்
கொண்டு சென்று செலுத்தினர் எனவும், பிரமனுலகிலுள்ள கங்கையே பகீரதன்
தவத்தால் நிலவுலகில் வந்தது எனவும் கந்தபுராணம் கூறாநிற்கும்;

"அந்நதி மூன்று தன்னி லயனகர் புகுந்த கங்கை
தன்னருந் திறலின் மிக்க பகீரதன் றவத்தாள் மீளப்
பின்னரு மிமையா முக்கட் பெருந்தகை முடிமேற் றாங்கி
இந்நில வரைப்பிற் செல்ல விறையதில் விடுத்தல் செய்தான்"

என்பது கந்தபுராணம், ததீசி யுத்தரப் படலம். (10)

தெரிசித் தோர்படிந் தாடினோர் செங்கையா லேனும்
பரிசித் தோர்பவத் தொடர்ச்சியின் பற்றுவிட் டுள்ளத்
துருசித் தோர்வுறு பத்தியும் விச்சையு முணர்வாய்
விரிசித் தோர்வுறு மெய்யுணர் வால்வரும் வீடும்.

     (இ - ள்.) தெரிசித்தோர் - கண்ணாற் கண்டவர், படிந்து ஆடினோர் -
திளைத்து மூழ்கினவர், செங்கையாலேனும் பரிசித்தோர் - சிவந்த
கையினாலேனும் தொட்டவர் ஆகிய இவர்கட்கு, பவத் தொடர்ச்சியின் பற்று
விட்டு - பிறவித் தொடர்பின் பற்று நீங்க, உள்ளத்து உருசித்து - உள்ளத்தில்
இனிக்க, ஓர்வுறு பத்தியும் - சிந்தித்தல் பொருந்திய அன்பும், விச்சையும் -
மெய்ஞ்ஞானமும், உணர்வாய் விரிசித்து ஓர்வுறும் - அறிவாகி (எங்கும்)
விரிந்த சித்தாகிய (நின்னை) உணரும், மெய் உணர்வால் வரும் வீடும் - அம்
மெய்ஞ் ஞானத்தால் வரும் வீடு பேறும் எ - று.

     விட்டு, உருசித்து என்பன செயவெனெச்சத் திரிபுகள். உணர்வாய்
அதனாற் சித்தெனப்படுவது; விரிசித்து - வியாபக சித்து;

"அகர வுயிர்போ லறிவாகி யெங்கும்
நிகரிலிறை நிற்கு நிறைந்து"

என்பது திருவருட் பயன். பத்தி, ஞானம், வீடு ஆகிய மூன்றையுமென்க. (11)