I


அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம்485



பதந்தி டப்பணித் தருளொனாத் தடம்புனற் செல்வி
சுந்த ரப்பெருங் கடவுளை வரங்கொண்டு தொழுது
வந்த ளப்பிலா வேகமொ டெழுந்துமா நதியாய்
அந்த ரத்துநின் றிழிபவ ளாமென வருமால்.

     (இ - ள்.) தந்திட பணித்தருள் எனா - (யான்) தருமாறு
கட்டளையிட்டருள்வாய் என்று, தடம் புனல் செல்வி - பெரிய
கங்கையானவள், சுந்தரப் பெருங் கடவுளைத் தொழுது வரம் கொண்டு -
ஒப்பற்ற சோம சுந்தரக் கடவுளை வணங்கி அவ்வரத்தினைப் பெற்றுக்
கொண்டு, வந்து அளப்பிலா வேகமோடு எழுந்து - வந்து அளவிறந்த
வேகத்துடன் எழுந்து, மாநதியாய் - பெரிய நதி வடிவாய், அந்தரத்து
நின்று இழிபவள் ஆம் என வரும் - வானினின்றும் இறங்குபவள் போல
வருகின்றாள் எ - று.

     கடவுளை வணங்கி அவர்பால் வரங்கொண்டென்க. பெருக்கெடுத்துக்
கீழ் மேலாக வருதலையுணர்த்த 'அந்தரத்துநின் றிழிபவ ளாமென' என்றார்.
ஆல் : அசை. (12)

[கலி விருத்தம்]
திரைவளையணி கரமுடையவள் செழுமணிநகை யுடையாள்
நுரைவளைதுகி லுடையவள்கொடி நுணுகிடையவ ளறனீள்
விளைவளைகுழ லுடையவள்கயல் விழியுடையவள் வருவாள்
வரைவளைசிலை யவன்முடிபட வரனதிவடி வினுமே.

     (இ - ள்.) வரை வளை சிலையவன் - மேரு மலையாகிய வளைந்த
வில்லையுடைய இறைவனது, முடி மடவரல் - முடியின்கண் உள்ள
கங்கையானவள், நதி வடிவினும் - ஆற்றின் வடிவமாக வரும் பொழுதும்,
திரை வளை அணி கரம் உடையவள் - அலைகளாகிய வளையணிந்த
கைகளையுடையவளாகியும், செழு மணி நகை உடையவள் - கொழுவிய
முத்துக்களாகிய பல் வரிசைகளையுடையவளாகியும், நுரைவிளை துகில்
உடையவள் - நுரைகளாகிய வளைந்த ஆடைகளையுடையவளாகியும், கொடி
நுணுகு இடையவள் - பூங்கொடியாகிய சிறுகிய இடையையுடையவளாகியும்,
அறல் நீள் விரை வளை குழல் உடையவள் - கருமணலாகிய நீண்ட மணம்
பொருந்திய கடைகுழன்ற கூந்தலையுடையவளாகியும், கயல் விழி உடையவள்
- கயல்களாகிய கண்களையுடையவளாகியும், வருவாள் - வருகின்றாள் எ-று.

     கங்கை நங்கை நதியாகியவிடத்தும் பெண்ணியல்பு குன்றாமல்
வந்தனளென்பார் திரை முதலியவற்றை வளைக்கை முதலியவாக உருவகித்து
'நதி வடிவினும் வருவாள்' என்றார். வளையைத் திரைக்குங் கொள்க. இது
முதல் "ஆரொடுமடலவிழ்" என்னும் செய்யுள் காறும் ஐஞ்சீரடியாக வகை
செய்தற்கும் இயையுமேனும் உருட்டு வண்ணமாகிய ஓசை நோக்கி நாற்சீரடி
நான்கு கொண்ட கலிவிருத்தமாகக் கொள்ளப்பட்டன.