I


486திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



"உருட்டு வண்ணம் அராகந் தொடுக்கும்"

என்பது தொல்காப்பியம். (13)

விரைபடுமகி லரைபொரிதிமில் வெயில்விடுமணி வரையோ
டரைபடமுது சினையலறிட வடியொடுகடி தகழாக்
குரைபடுகடி லிறவுளர்சிறு குடியடியொடு பறியாக்
கரைபடவெறி வதுவருவது கடுவிசைவளி யெனவே.

     (இ - ள்.) விரைபடும் அகில் - மணம் பொருந்திய அகிலும், பொரி
அரை திமில் - பொருக்கினையுடைய அடியையுடைய வேங்கையும், வெயில்
விடுமணி வரையோடு அரைபட - ஒளிவீசும் மணிகளையுடைய மலையோடு
(தாக்கி) அரைபடவும், முது சினை அலறிட - அவற்றின் பெரிய கிளைகள்
புலம்பவும், அடியொடு கடிது அகழா - அவற்றை அடியோடு விரைந்து
பறித்தும், குரைபடு கழல் இறவுளர் சிறுகுடி - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த
வேட்டுவர்களின் சீறூரை, அடியொடு பறியா - அடியோடு பெயர்த்தும்,
கரைபட எறிவது - கரைகளிற் பொருந்த வீசுவதாகிய அந்நதி, கடுவிசை வளி
என வருவது - மிக்க விரைவினையுடைய பெருங் காற்றுப் போல வாரா
நின்றது எ - று.

     பொரியரை என மாறுக. திமில் - வேங்கையின் ஒரு சாதி; திமிசு
எனவும் படும். சிறுகுடி குறிஞ்சி நிலத்தூர்; ஈண்டு ஊரிலுள்ள குடிசைகள்.
எறிவது பெயர். (14)

பிணையொடுகலை பிடியொடுகரி பிரிவிலவொடு பழுவப்
பணையொடுகரு முசுவயிறணை பறழொடுதழு வியதன்
றுணையொடுகவி பயின்மரநிரை தொகையொடுமிற வுளர்வெங்
கணையொடுசிலை யிதணொடுமெறி கவணொடுகொடு வருமால்.

     (இ - ள்.) பிரிவில பிணையொடு கலை - சேர்ந்திருப்பனவாகிய
பெண் மானோடு ஆண் மானையும், பிடியொடு கரி - பெண் யானையோடு
ஆண் யானையையும். பழுவம் ஒடு பிணையொடு - காட்டிலுள்ள ஒடு
மரத்தைக் கிளைகளோடும், கரு முசு - கரிய ஆண் முசுவை, வயிறு அணை
பறழொடு தழுவிய தன் துணையொடு - வயிற்றில் பற்றிய குட்டியோடு கூடிய
அதன் பெண் குரங்கோடும், கவி பயில் மரம் நிரை தொகையொடு -
குரங்குகள் உலாவும் மரங்களை வரிசையாகிய தொகுதியோடும், இறவுளர்
சிலை வெங்கணையொடு - வேடர்கள் வில்லைக் கொடிய அம்புகளோடும், இதணொடும் எறி கவணொடு - (அவர்கள் தினைப்புனத்துப்) பரணினை
வீசும் கவணோடும், கொடு வரும் - வாரிக்கொண்டு வரும் (அந்ததி) எ - று.

     பிணையொடு கலையும் பிடியொடு கரியும் பிரிவில்லாதவற்றோடு
என்றும், பறழொடு தழுவிய துணையொடு கூடிய முகவைப் பணையொடு
என்றும், முசுவைப் பெண்ணும் கவியை ஆணுமாக்கி, பறழொடு முசுவையும்
துணையொடு கவியையும் என்றும், கவிகளைத் தொகையொடு என்றும்,
இறவுளரைச் சிலையொடும் இதணொடும் என்றும், பிறவாறும் இயைத்
துரைத்தலுமாம். முசு - குரங்கின் ஓர் வகை. உம்மை விரித்துக் கொள்க.
ஆல் : அசை. (15)