அடியிறநெடு வரைதைவன வகழ்வனவகழ் மடுவைத்,
திடரிடுவன மழைசெருகிய சினைமரநிரை தலைகீழ்
படவிடிகரை தொறுநடுவன படுகடலுடை முதுபார்
நெடுமுதுகிரு பிளவுறவரு நெடுநதியின வலையே. |
(இ
- ள்.) படுகடல் உடை முதுபார் - கடலாகிய ஆடையினையுடைய
பெரிய பூமியின், நெடுமுதுகு இரு பிளவு உற - நீண்ட முதுகு இரண்டு
பிளவுபட, வரும் நெடு நதியின் அலை - வருகின்ற நீண்ட நதியின்
கூட்டமாகிய அலைகள், நெடுவரை அடி இற உதைவன அகழ்வன - பெரிய
மலைகளின் அடிகெட மோதித் தோண்டுவனவும், மடுவைத் திடர் இடுவன -
பள்ளங்களை மேடாக்குவனவும், மழை செருகிய சினைமரம் - மேகத்தை
ஊடுருவிய கிளைகளையுடைய மரங்களை, இடிகரை தொறும் நிரை தலை
கீழ்பட நடுவன - இடிந்த கரைகள் தோறும் வரிசையாகத் தலை கீழாக
நடுவனவும் ஆயின எ - று.
படுதல்
- ஒலித்தல்;
"படுகண் முரசங்
காலை யியம்ப" |
என்னும் மதுரைக்காஞ்சி
யடியின் உரையை நோக்குக. நதியின் -
நதியினுடைய வென அகரம் ஆறனுருபுமாம். ஏ : அசை. (16)
பிளிறொலியின முதுமரமகழ் பெருவலியின வசையா
வெளிறடிவன வெறிமணியின விரைசெலவின மதமோ
டொளிறளியின நுரைமுகபட முடையனவென வரலால்
களிறனையன மதுவிதழிகள் கவிழ்சடையணி குடிஞை. |
(இ
- ள்.) மது இதழிகள் கவிழ்சடை அணி குடிஞை - இறைவனது
தேனொழுகும் கொன்றை மலர் மாலைகள் தொங்குகின்ற சடையிலணிந்த
கங்கையாற்றின் அலைகள், பிளிறு ஒளியின - ஒலிக்கும் போரொலியை
உடையனவும், முது மரம் அகழ்பெரு வலியின - பெரிய மரங்களைப்
பறிக்கும் பெரிய வலியினை உடையனவும், அசையா வெளில் தடிவன -
அசையாத விளாமரங்களை முறிப்பனவும், எறிமணியின் - வீசா நின்ற
முத்துகளை உடையனவும், விரை செலவின - விரைந்த செலவினை
யுடையவனும், மதமோடு ஒளிறு அளியின - மான் மதத்தோடு விளங்கும்
வண்டுகளை உடையனவும், நுரைமுக படம் உடையன என வரலால் -
நுரையாகிய முதன்மையான ஆடையை உடையனவுமாக வருதலால், [பிளிறு
ஒலியின - பேரொலியையுடையனவும், முது மரம் அகழ்பெரு வலியின -
பெரிய மரங்களைப் பெயர்க்கும் பெரிய வலியினை யுடையனவும், அசையா
வெளில் தடிவன - அசையாத கட்டுத்தறியை முறிப்பனவும், விரைசெலவின -
விரைந்த செலவினை யுடையனவும், மதமோடு ஒளிறு அளியின - மதத்துடன்
(அதை உண்ணவரும்) ஒள்ளிய வண்டுகளை யுடையனவும், நுரைமுக படம்
உடையன - நுரைபோலும் (வெள்ளிய) முகபடாத்தை யுடையனவுமாகிய]
களிறு அனையன - யானைகளை ஒத்தன எ - று.
|