ஒலியின, வலியின,
செலவின என்பனயாற்றின் அலைக்கும் களிற்றுக்கும்
பொது. வெளில் தடிவன, எறிமணியின, மதமோடு ஒளிறு அளியின, நுரை
முகபடமுடையன என்பன செம்மொழிச் சிலேடையாய் யாற்றுக்கும்
களிற்றுக்கும் இயைய வெவ்வேறு பொருள் தருவன. என : ஆக வென்னும்
பொருட்டு. இதழி மாலைக்கும், குடிஞை அலைக்கும் ஆகு பெயர்கள்.
இதழிகள் மதுவைக் கவிழ்க்கும் என்னலுமாம். ஒலியின என்பது முதல் யாவும்
பன்மையாகலின் குடிஞை என்பதற்கு அலைகள் என்று பொருள் கூறப்பட்டது.
விளா என்னும் பொருளில் வெள்ளில் என்பது வெளில் எனத் தொக்கதாகக்
கொள்க. (17)
நீடியபில
முறுநிலையன நிருமலன்மதி முடிமீ
தாடியசெய லினவெயிலுமி ழருமணிதலை யினநீள்
கோடியகதி யினநிரைநிரை குறுகியபல காலின்
ஓடியவலி யினவளையுட லுரகமுமென வருமால். |
(இ - ள்.) (அந்நதியின் அலைகள்) நீடிய பிலம் உறு நிலையின
- ஆழ்ந்த பாதலத்திற் பொருந்தும் தன்மையையுடையனவும், நிருமலன் மதி
முடி மீது ஆடிய செயலின - இறைவனது பிறையையணிந்த முடியின் மேல்
அசையும் செயலையுடையனவும், வெயில் உமிழ் அருமணி தலையின - ஒளி
வீசும் அரிய மணிகளைத் தம்மிடத்துடையனவும், நீள் கோடிய கதியின் -
மிக்க வளைந்த நடையினையுடையனவும், நிரை நிரை குறுகிய பலகாலின்
ஓடிய வலியின - வரிசை வரிசையாக நெருங்கிய பல கால்களின் வழியாக
ஓடுகின்ற வலியினையுடையனவுமாய், [நீடிய பிலம் உறும் நிலையின -
ஆழ்ந்த பிலத்திற் பொருந்தும் நிலையினையுடையனவும், நிருமலன் மதி முடி
மீது ஆடிய செயலின - இறைவன் மதியணிந்த திருமுடிமேல் ஆடுகின்ற
செயலினையுடையனவும், வெயில் உமிழ் அரு மணி தலையின - ஒளி வீசும்
அரிய மணிகளைச் சுடிகையிலுடையனவும், நீள் கோடிய கதியின - மிக்க
வளைந்த செலவினையுடையனவும், நிரை நிரை குறுகிய பலகாலின் ஓடிய
வலியின - வரிசை வரிசையாய்ச் சிறுத்துள்ள (கண்ணுக்குப் புலனாகாத) பல்
கால்களினால் ஓடும் வலியினையுடையனவுமாகிய] வளை உடல் உரகமும்
என வரும் - வளைந்த உடலினையுடைய பாம்புகள் போலவும் வரும் எ-று.
பிலம்
- பாதலமும், வளையும். நீள் - மிக்க : வினைத்தொகை.
உரகமெனவும் என உம்மையை மாற்றுக. ஆல் : அசை. இதுவும் செம்மொழிச்
சிலேடை. (18)
மண்ணகழ்தலின்
வளையணிகரு மாவனையது மிசைபோய்
விண்ணளவலி னவுணர்களிறை விடுபுனலொடு நெடுகும்
அண்ணலையனை யதுசுவையிழு தளையளைவுறு செயலாற்
கண்ணனையனை யதுநெடுகிய கடுகியகதி நதியே. |
(இ
- ள்.) கடுகிய கதி நெடுகிய நதி - விரைந்த செலவினையுடைய
நீண்ட அந்நதியானது, மண் அகழ்தலின் - மண்ணைத் தோண்டிச்
செல்லுதலால், வளை அணி கருமா அனையது - சங்கினை ஏந்தியவராக
மூர்த்தியை ஒத்தது; மிசைபோய் விண் அளவலின் - மேலே போய்
வானுலகத்தைத் தடவலால், அவுணர்கள் இறைவிடு புனலொடு நெடுகும்
|