அண்ணலை அனையது -
அவுணர்கள் தலைவனாகிய மாபலிச்சக்கரவர்த்தி
தாரை வார்த்த நீரோடு பேருருக் கொண்ட வாமன மூர்த்தியை ஒத்தது;
சுவை இழுது அளை அளைவுறு செயலால் கண்ணனை அனையது -
சுவையையுடைய வெண்ணெயும் தயிரும் அளைந்து வருதலாற் கண்ணபிரானை
ஒத்தது எ - று.
கருமா
- பன்றி; சிவபெருமான் திருவடியைக் காண்டற்கு நிலத்தைக்
கீழ்ந்து சென்ற திருமாலாகிய பன்றி. புனலொடு - நீர் வார்த்த உடனாக.
திருமால் வாமனனாக விருந்து மாபலியின்பால் மூன்றடி மண் இரந்து பெற்றுத்
திரிவிக்கிரமனாக வளர்ந்து, புவியையும் வானத்தையும் இரண்டடியால் அளந்த
கதை கூறிற்று; நெடுகும் அண்ணல் - திரி விக்கிரமன் என்னலுமாம். இழுது -
நெய்; அளை - தயிர்; அளைதல் - முல்லை நிலத்திலுள்ளன நீரில் விரவி
வருதலும், ஆய்ச்சியர் இல்லங்களிற் கையாற் பிகைதலும் ஆம். ஒன்றற்கே
பல பொருள் உவமையாகக் கூறப்படுதலின் பல்பொருளுவமையும், ஏதுவுடன்
கூடி வருதலின் ஏதுவுவமையும் ஆம்; மேல் இங்ஙனம் வருவனவும் இவை.
(19)
திகழ்தருகரி பரிகவரிகள் செழுமணியொடு வருமா
றிகழ்தருகுட புலவரசர்க ணெறிசெய்துகவர் திருவோ
டகழ்தருபதி புகுமதிகுல வரசனையதை யலதேற்
புகழ்தருதிறை யிடவருகுட புலவரசனு நிகரும் |
(இ
- ள்.) திகழ்தரு கரி பரி கவரிகள் செழுமணியொடு வரும் ஆறு
- விளங்கா நின்ற யானைகள் குதிரைகள் சாமரைகள் கொழுவிய
முத்துக்களாகிய இவைகளோடும் வருகின்ற அந்நதி, இகழ்தரு குடபுல
அரசர்கள் நெறி செய்து - இகழ்ந்த மேற்புல மன்னர்களை (வெற்றியினால்
தன்) ஆணை வழிப்படுத்தி, கவர் திருவோடு அகழ்தரு பதி புகும் -
அவர்கள் பானின்றும் கவர்ந்த செல்வங்களோடும் அகழி சூழ்ந்த
மதுரைப்பதியிற் புகும், மதி குல அரசு அனையது - சந்திரகுலத்து அரசாகிய
பாண்டியனை ஒத்தது; அலதேல் - அல்லதாயின், திறை இடவரு புகழ்தரு
குடபுல அரசனும் நிகரும் (மதுரைப்பதிக்குத்) திறை இறுக்க வரும் புகழமைந்த
மேற்புல மன்னனையும் ஒக்கும் எ - று.
அகழ்தரு
- அகழி பொருந்திய. மதிகுலம் : வடநூன் முடிபு.
அனையதை, ஐ : சாரியை. அலது, அன்றென்னுந் துணையாய் நின்றது.
புகழ்தரு, திறைக்கு அடையுமாம். குடபுலவரசன் - சேரன். (20)
ஆரொடுமட லவிழ்பனையொடு மரநிகரிலை நிம்பத்
தாரொடுபுலி யொடுசிலையொடு தகுகயலொடு தழுவாப்
பாரொடுதிசை பரவியதமிழ் பயிலரசர்கள் குழுமிச்
சீரொடுபல திருவொடுவரு செயலனையது நதியே. |
(இ
- ள்.) நதி - அந் நதியானது, ஆரோடும் - ஆத்தி மாலையோடும்,
மடல் அவிழ் பனையொடும் - இதழ் விரிந்த பனை மாலையோடும், அரம் கர்
இலை நிம்பத்தாரொடு் - அரத்தினை ஒத்த இலையையுடைய வேப்ப
மாலையோடும், புலியொடு சிலையொடு தகு கயலொடு தழுவா - புலியோடும்
வில்லோடும் தக்க கயலோடும் தழுவி வருதல், பாரொடு
|