வண்டோதை மாறா மலர்வேணியின் வந்த நீத்தங்
கண்டோத நஞ்சுண் டருள்கண்ணுதல் மூர்த்தி பேழ்வாய்
விண்டோ தணியாதென் விடாயென வெம்பி வீழ்ந்த
குண்டோ தரனை விடுத்தானக் குடிஞை ஞாங்கர். |
(இ
- ள்.) வண்டு ஓதை மாறா மலர் வேணியின் வந்த - வண்டுகளின்
ஒலி நீங்காத (கொன்றை) மலரையணிந்த சடையினின்றும் வந்த, நீத்தம் -
வெள்ளத்தை, ஓதம் நஞ்சு உண்டருள் கண்ணுதல் மூர்த்தி கண்டு - கடலிற்
றோன்றிய நஞ்சினை உண்டருளிய நெற்றிக் கண்ணனாகிய இறைவன் நோக்கி,
பேழ் வாய் விண்டு ஓ என் விடாய் தணியாது என வெம்பி வீழ்ந்த
குண்டோதரனை - பெரிய வாயைத் திறந்து ஐயகோ என் நீர் வேட்கை
தணிந்திலது என்று வெதும்பி வீழ்ந்த குண்டோதரனை, அக் குடிஞை ஞாங்கர் விடுத்தான்
- அந் நதியின் பக்கலிற் செல்ல விடுத்தான் எ - று.
யாவரும்
உண்ணாத அரு நஞ்சுண்டும் வானோரைப் புரந்த
பேரருளாளன் இப்பூதத்தின் துயரையொழித்தல் ஒருதலையென்பார்,
'நஞ்சுண்டருள் கண்ணுதன் மூர்த்தி' என்றார். ஓகாரம் அரற்றின் கண்
வந்தது. (23)
அடுத்தா னதியின் னிடைபுக்கிருந் தாற்ற லோடும்
எடுத்தான் குறுங்கை யிரண்டுங்கரை யேற நீட்டித்
தடுத்தான் மலைபோ னிமிர்தண்புனல் வாயங் காந்து
மடுத்தான் விடாயுங் கடலுண்ணு மழையு நாண. |
(இ
- ள்.) அடுத்தான் நதியின் இடைபுக்கு இருந்து - அடுத்து
நதியின்கண் போயிருந்தும், ஆற்றலோடும் குறுங்கை இரண்டும் எடுத்தான்
- வலிமையோடும் தனது குறிய இரண்டு கைகளையும் எடுத்து, கரை ஏற
நீட்டி தடுத்தான் - கரையிற் செல்ல நீட்டி (நீரைத்) தடுத்து, வாய் அங்காந்து
- வாயைத் திறந்து, விடாயும் கடல் உண்ணும் மழையும் நாண - நீர்
வேட்கையும் கடல் குறை படப் பருகும் முகிலும் நாணுமாறு, மலை போல்
நிமிர் தண்புனல் மடுத்தான் - மலைபோல உயர்ந்த குளிர்ந்த புனலைப்
பருகினான் எ - று.
தன்வலி
குன்றினமையில் விடாயும், தன்னினும் மிகுதியாகப்
பருகினமையின் மழையும் நாணின என்றார். அடுத்தான், எடுத்தான்,
தடுத்தான் என்னும் முற்றுக்கள் எச்சமாயின. (24)
தீர்த்தன் சடைநின் றிழிதீர்த்த மருந்தி வாக்குக்
கூர்த்தின்பு கொண்டு குழகன்றிரு முன்ன ரெய்திப்
பார்த்தன் பணிந்த பதமுன்பணிந் தாடிப் பாடி
ஆர்த்தன் புருவாய்த் துதித்தானள வாத கீதம். |
(இ
- ள்.) தீர்த்தன் சடை நின்று இழி தீர்த்தம் அருந்தி - இறைவன்
சடையினின்றும் இறங்கிய அந்நீரைப் பருகி, வாக்குக் கூர்த்து - வாக்கு
மிகுத்து, இன்பு கொண்டு - மகிழ்ந்து, குழகன் திருமுன்னர் எய்தி -
|