யெல்லாம் ஈன்றருளிய
தடாதகைப் பிராட்டியாருக்குத் தாய் ஆனாய்;
சிவபெருமான் மருகன் எனும் சீர் பெற்றாய் - சிவபெருமானே உனக்கு
மருகன் என்று கூறப்படும் சிறப்பினைப் பெற்றாய்; நீ அறியாத தொல்விரதம்
அவனியிடத்து அறிவார் எவர் - (ஆதலால்) நீ அறியாத பழைய விரதங்களை
இவ்வுலகின்கண் அறிபவர் வேறு யாவர், ஆனாலும் இயம்பக் கேள் -
அங்ஙனமாயினும் நீ வினவினமையால் யான் சொல்லுதலைக் கேட்பாயாக
எ - று.
தவ
வலியால் ஆனாய் என வியையும். எவர் என்றது என்போலும்
சிற்றறிவுடையார் யாவர் என்றபடி. (5)
மானதமே வாசிகமே காயிகமே யெனவகுத்த
ஈனமில்சீர்த் தவமூன்றா மிவற்றின்மா னதந்தரும
தானமிசை மதிவைத்த றயைபொறுமை மெய்சிவனை
மோனமுறத் தியானித்த லைந்தடக்கன் முதலனந்தம். |
(இ
- ள்.) வகுத்த ஈனம் இல் சீர்தவம் - (நூல்களால்) வகுக்கப்பட்ட
குற்றமில்லாத சிறப்பினையுடைய தவம், மானதமே வாசிகமே காயிகமே என
மூன்றாம் - மானதமெனவும் வாசிகமெனவும் காயிகமெனவும் மூன்று
வகைப்படும்; இவற்றில் - இம் மூன்றில், மானதம் - மனத்தாற் செய்யப்படுவன, தருமதானமிசை
மதிவைத்தல் - தருமமும் தானமும் செய்வதிற் கருத்து
வைத்தல், தயை - பிறவுயிர்களுக்கு இரங்கல், பொறுமை - பிறர் தீமையைப்
பொறுத்தல், மெய் - உண்மை கூறல், மோனம் உறச்சிவனைத் தியானித்தல் -
மோன நிலை பொருந்த இறைவனைச் சிந்தித்தல், ஐந்து அடக்கல் -
ஐம்பொறிகளை அடக்குதல், முதல் அனந்தம் - முதலாக அளவில்லாதனவாம்
எ - று.
மானதம்
- மனத்தாற் செய்யப்படுவன. வாசிகம் - வாக்காற்
செய்யப்படுவன. காயிகம் - காயத்தாற் செய்யப்படுவன - தானம் - அற
நெறியால் வந்த பொருளைத் தக்கார்க்கு உவகையோடு அளிப்பது. மோனம்
- சங்கற்ப விகற்பமில்லாமை. ஏகாரங்கள் எண்ணுப் பொருளன. (6)
வாசிகமைந் தெழுத்தோதன் மனுபஞ்ச சாந்திமறை
பேசுசத வுருத்திரந்தோத் திரமுரைத்தல் பெருந்தருமங்
காசகல வெடுத்தோதன் முதலனந்தங் காயிகங்கள்
ஈசனருச் சனைகோயில் வலஞ்செய்கை யெதிர்வணங்கல். |
(இ
- ள்.) வாசிகம் - வாக்காற் செய்யப்படுவன, ஐந்து எழுத்து
ஓதல் - திருவைந் தெழுத்தைச் செபித்தலும், பஞ்சமனு சாந்தி - பஞ்சப் பிரம
மந்திரங்களையும் உபநிடதப் பகுதிகளையும், மறை பேசு சத உருத்திரம் -
வேதங் கூறும் சத உருத்திர மந்திரங்களையும் ஓதுதலும், தோத்திரம்
உரைத்தல் - துதிப்பாட்டுக்களைக் கூறலும், பெருந்தருமம் காசு அகல
எடுத்து ஓதல் - பெரிய அறங்களைக் குற்றமற எடுத்துக் கூறலும், முதல்
அனந்தம் - முதலாக அளவில்லாதனவாம்; காயிகங்கள் - உடலாற்
செய்யப்படுவன, ஈசன் அருச்சனை - சிவபெருமானைப் பூசித்தலும், கோயில்
வலம் செய்கை - திருக்கோயில் வலம் வருதலும், எதிர் வணங்கல் -
இறைவன் திருமுன் வணங்கலும் எ - று.
|